(Reading time: 18 - 35 minutes)
Kaarigai
Kaarigai

டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. அதுக்காக தான் உங்க டீடெயில்ஸ் கேட்டேன். அதே போல ஏதாவது எமெர்ஜெண்சில உங்களை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது? எல்லா எம்பலோயீஸும் அவங்க பர்சனல் நம்பர் கொடுத்திருக்கும் போது நீங்க மட்டும் ஏன் கொடுக்கல? நீங்க இங்க இருந்த ப்ரீவியஸ் மேனேஜர் மிருணாளினி மேடம் ரெக்கமண்டேஷன் அப்டிங்கறதாலயா?" சத்யா அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து வந்து அவள் அருகே நின்று அவளின் முகம் பார்த்து கேட்டான்.

இதற்கும் மேல் அவனிடம் பேச அவளுக்கு விருப்பமில்லை. இந்த பேச்சை இதோடு நிறுத்த எண்ணியவள், "நான் டூ வீலர்ல தான் வரேன். என் கிட்ட மொபைல் இல்லை" பவித்ராவின் பதிலில் ஒருநிமிடம் ஆச்சர்யப்பட்டு தான் போனான். பெரிய பணம் படைத்தவள், அவளிடம் ஒரு மொபைல் இல்லையா என்று அவனால் நம்ப முடியவில்லை.

"அப்போ உங்களை எப்படி தான் காண்டாக்ட் பண்றது?" - சத்யா

"என் ஹாஸ்டெல் நம்பர் தரேன். ஏதாவது எமெர்ஜென்சினா அங்க கால் பண்ணி என் பேர் சொன்னா கூப்பிடுவாங்க" சொன்னவள் அங்கிருந்த ஒரு பேப்பரில் அவளின் ஹாஸ்டெல் நம்பரை எழுதி அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கியவன், "நீங்க கிளம்பலாம்" என்று அவள் லேப்டாப்பை எடுக்க நகர்ந்து வழி விட அவள் அதையும் எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

அவள் அந்த ட்ராபிக்கில் ஹாஸ்டலை வந்தடையும் போது நேரம் ஒன்பதரையை தாண்டியிருந்தது. இனி ஆஸ்ரமத்திற்கு போக முடியாது என எண்ணியவள் இரவு உணவு உண்ண மனமில்லாமல் அவளின் அறைக்குள் கிடந்த கட்டிலில் அமர்ந்தாள்.  ஏனோ ஒரு வித அயர்வு அவளை ஆட்கொண்டது. கட்டிலில் அப்படியே சாய்ந்து கண்மூடினாள். அவளின் மனம் தாய்மடிக்காக ஏங்கியது. அவளின் அன்னையின் மடியில் படுத்து அவள் தலை கோத கண்மூடி கிடக்கும் சுகம் தேடியது மனம். கண்களின் ஓரம் ஒரு துளி நீர் திரண்டு வழிந்தது.

அதே நேரம் அங்கே வீட்டில் இருந்த சோபாவில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் சத்யா. அவனின் சுழிந்த புருவங்கள் அவன் ஏதோ ஒரு யோசனையில் இருக்கிறான் என காட்டியது. அவன் குடிப்பதற்காக பால் கொண்டு வந்த லட்சுமி அவன் அமர்ந்திருப்பதை கண்டு அவன் அருகே அமர்ந்தார். அவனின் சுழிந்த புருவங்களை மெல்ல நீவி விட்டார். அதில் கண் திறந்தவன் அருகே இருந்த லக்ஷ்மியை பார்த்ததும் அவரின் மடியில் தலை சாய்த்து படுத்தான். அவன் குழப்பமாகவோ மன வருத்தத்துடனோ இருக்கும் போது தான் இப்படி படுத்து கொள்வான். லட்சுமி எதுவும் கேட்காமல் அவனின் தலைமுடியை தன் கை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.