(Reading time: 18 - 35 minutes)
Kaarigai
Kaarigai

விடாம இங்க உக்கார வெச்சுருக்காங்க" -சத்யா

"உன்னை வாயை மூட சொன்னேன்ல " -பெண் போலீஸ்

"நான் என்ன தப்பு பண்ணேன், நான் ஏன் வாயை மூடனும்?" சத்யா சொல்ல அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அடி விழுந்த வேகத்தில் அவன் உதடு கிழிந்து ரத்தம் கசிய தொடங்கியது.

"என்னடா என் முன்னாடியே டிபார்ட்மென்ட் ஆளு கிட்டயே இப்படி பேசறவன் கண்டிப்பா பொம்பளை புள்ளைங்க கிட்ட நல்லா பேசியிருக்க மாட்ட. ஏம்மா இவனை கூட்டிட்டு போயி செல்லுல ரெண்டு நாலு வையி. எல்லாம் அடங்கிடும்" இன்ஸ்பெக்டர் சொல்லவும் அவனை அங்கிருந்த ஜீப்பில் ஏற்றி அருகே இருந்த போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

இவனை கொண்டு செல்வதை பார்த்த அந்த காபி ஷாப்பில் இருந்த சிலர் இவனின் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் இவனின் தந்தையோடு அந்த ஸ்டேஷன்னுக்கு செல்லும் போது அவனை அடித்து துவைத்திருந்தார்கள். அவனை கண்டு சுந்தரத்தின் மனம் பதறிப்போனது.

சுந்தரத்தை பார்த்த போலீசார் "சார் நீங்க எங்க இங்க?" எனவும் "என் பையனை ஒரு ஈவ் டீசிங் விஷயமா இங்க கூட்டிட்டு வந்திருக்கறதா சொன்னாங்க " அவர் அவமானத்தில் கூனி குறுகி போயிருந்தார்.

"சார் உங்க பையனா? சொல்லவே இல்லை சார். சும்மா ஒரு மிரட்டு மிரட்டிட்டு விட்ரலாம்னு தான் கூட்டிட்டு வந்தோம். நம்ம ஆளுங்க கிட்டயே எதிர்த்து பேசிட்டாரு தம்பி அதான்" -தலையை சொரிந்தார் அங்கிருந்த எஸ்ஐ.

"சாரி சார் அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். படிக்கிற பையன் சார்" சுந்தரம் சொல்ல, "கவலை படாதீங்க சார். எப்ஐஆர் எதுவும் போடல. நீங்க கூட்டிட்டு போங்க" என்று சொல்ல அங்கிருந்து அவனை வெளியே அழைத்து வந்தவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லாமல் நின்றிருந்தான் சத்யா. அவனை நிமிர்ந்து பார்த்த சுந்தரத்தின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

"வாடா போலாம்." சுந்தரம் சொல்ல, "அப்பா நான் ராஜ் கூட வண்டில வரேன் பா" என்று சத்யா சொல்லவும் அவனை திரும்பி பார்த்தவர் "திருந்த மாட்ட இல்லை நல்லதுப்பா" என்றவர் அங்கிருந்து கிளம்பி செல்ல  தன் நண்பனுடன் கிளம்பியவன் நேரே சென்றது பவித்ராவின் வீட்டுக்கு தான். அதன் பின் இரண்டு மாதங்கள் அவனுடன் அவன் தந்தை பேசவே இல்லை. அவன் மேல் எந்த தவறும் இல்லை என சொல்ல கூட அவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.