(Reading time: 18 - 35 minutes)
Kaarigai
Kaarigai

வேலையை மெச்ச வேண்டும் என தோன்றியது. ஆனாலும் அவனின் அகங்காரம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை.

"ஹ்ம்ம் லுக்ஸ் ஓகே" என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தான். அவள் அந்த அறைக்குள் நுழைந்தது முதல் ஏதோ ஒருவித மெல்லிய நறுமணம் பரவியது போல இருந்தது.

"என்ன பெர்பியும் யூஸ் பண்றீங்க ?"  அவன் நிச்சயமாக ஒரு ஆர்வத்தில் தான் இதை கேட்டான். ஆனால் பவித்ராவின் முகம் ஒரு சில நொடிகள் கோபத்தை காட்டியதை அவன் கவனிக்க தவறவில்லை.

"சார் நீங்க ரெவியூ பண்ணிட்டிங்கனா நான் கெளம்புவேன்" அவனின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை போல இருந்தது அவளின் பதில். இப்போது சத்யாவின் மனதில் ஒருவித சந்தோஷம் பரவியது. இவளை கோப படுத்தவும் அழவிடவும் என்ன செய்யவேண்டும் என தெரிந்து விட்டது அவனுக்கு.

"ஹ்ம்ம் கிளம்பலாம் பவித்ரா. நீங்க டூ வீலர்ல தான ஆபீஸ் வரீங்க?" -சத்யா

"....." பதிலில்லை பவித்ராவிடம் இருந்து.

"உங்க டீடெயில்ஸ் எல்லாம் நான் பார்த்தேன், ஆனா அதுல உங்க பர்சனல் காண்டாக்ட் நம்பர் இல்லையே. உங்க மொபைல் நம்பர் சொல்லமுடியுமா?" -சத்யா. இப்போதும் அவளிடம் பதில் இல்லை.

"நீ அமைதியாக நின்றால் உன்னை அப்படியே விட்டுவிட்டு செல்ல நான் ஒன்றும் பழைய சத்யா இல்லை" என்று எண்ணியவன், "பவித்ரா நான் உங்க கிட்ட தான் கேக்கறேன், யு ஹவ் டு அன்சர் தி க்வேஸ்டியன்ஸ் பிரம் யுவர் ஹையர் ஆஃபீசியல்ஸ். டோன்ட் யு க்நொவ் தட்?" அழுத்தமாகவும் அதட்டலாகவும் வந்தது சத்யாவின் குரல்.

"தெரியும் சார். ஆனா என்னுடைய தனிப்பட்ட விவரங்களை பற்றிய கேள்விக்கு நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனு நெனைக்கிறேன்" அதே அழுத்தத்துடன் வந்தது பவித்ராவின் பதில்.

"திமிர் பிடித்தவள்" மனதிற்குள் கருவியவன், "நான் உங்க கிட்ட கேட்டது எல்லாமே ஆஃபீசியல் க்வேஸ்டியன்ஸ் தான் " அவனும் பதில் தந்தான்.

"நான் டூ வீலர்ல வரனா இல்லை பஸ்ல வரனா அப்படிங்கறது கம்பெனிக்கு எந்தவிதத்திலும் சம்மந்தப்படாத கேள்வி, அதே போல தான் என் பர்சனல் நம்பர் கேக்கறதும்" - பவித்ரா முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அதே சமயம் அந்த பதிலில் ஒரு அழுத்தத்துடன் சொன்னாள்.

"கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு ஆபீஸ் மூலமா ட்ரான்ஸ்போர்ட்டேஷன் கொடுக்கறதை பத்தி ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.