(Reading time: 18 - 35 minutes)
Kaarigai
Kaarigai

அவளுக்கும் அவள் உடைக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை. அத்தனை லூசாக ஒரு மங்கிய நிறத்தில் இருந்தது. இரண்டு புறமும் துப்பட்டாவை பின் செய்து வைத்திருந்தாள். நீண்ட முடியை இழுத்து பின்னியிருந்தாள். தோளில் கிடந்த பை அவள் கல்லூரிக்கு செல்லும் பெண் என உணர்த்தியது. எந்த ஒரு சிறு நகையும் இல்லை. நெற்றியில் ஒரு சிறிய பொட்டு. வசதி இல்லாத வீட்டு பெண் போல பாவம் என்று தோன்றியது அவனுக்கு. ஆனாலும் ஏனோ அவளிடம் ஏதோ ஒன்று வசீகரமாக இருப்பதாக தோன்றியது சத்யாவுக்கு. அவள் அறிந்தோ அறியாமலோ அவளின் அழகை குறைத்து காண்பிக்க முயன்று அதில் தோற்றிருக்கிறாள் என எண்ணினான். அவளிடம் சென்று பேச வேண்டும் என தோன்றியது அவனுக்கு.  அதே நேரம் ஒரு இன்னோவா கார் வந்து அவள் அருகில் நிற்க அவள் அதில் ஏறிக்கொண்டு செல்லவும் அவனுக்கு ஆச்சர்யம். அவள் வசதியான வீட்டு பெண்ணா என்ன என்று குழம்பி போனான்.

பின் அடிக்கடி அந்த காபி ஷாப்பிற்கு வரும் போதெல்லாம் அந்த நூலகத்தை பார்க்க தொடங்கியவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவள் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் அந்த நூலகத்திற்கு வருகிறாள். அவள் கிளம்பும் போது அதே இன்னோவா கார் வந்து அவளை கூட்டி செல்கிறது என்று.அவளை பார்க்க பார்க்க அவன் மனதிற்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் தோன்றும். அது என்னவென்றும் ஏனென்றும் அவனுக்கு விளங்கவில்லை. தங்களின் அழகை கூட்டி காட்ட முயலுபவர்களுக்கு மத்தியில் தன்னுடைய அழகை குறைத்து காட்டும் அவள் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தாள். அது அவனை அவள் புறம் மெல்ல மெல்ல சாய்க்க தொடங்கியது. அவளுடன் சென்று பேச எண்ணியவன் அவன் நண்பர்கள் இருக்கும் போது பேச முயலவில்லை. தேவை இல்லாமல் ஏதாவது கிண்டல் கலாட்டா என்று பேச ஆரம்பித்து விடுவார்கள், பின் அவள் வருந்த நேரிடும் என்று தனிமையில் பேசும் சந்தர்ப்பத்திற்க்காக காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. நண்பர்கள் எல்லோரும் ஏதோ ஒரு திரைப்படத்திற்க்காக கிளம்பி செல்ல இவன் அதை தவிர்த்து விட்டு அந்த காபி ஷாப் வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அவள் நின்று கொண்டிருந்தாள். அந்த காபி ஷாப்பில் வண்டியை நிறுத்தியவன் அவளிடம் சென்றான்.

அவள் அருகே சென்றவனுக்கு கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது. இரண்டு கைகளாலும் தலை முடியை கோதியவன் தன்னை நிதானப்படுத்தி கொண்டு அவளை நெருங்கினான்.

"ஹலோ ஐ யாம் சத்யா. இந்த காலேஜ்ல தான் எம்பிஏ பைனல் இயர் படிக்கிறேன். நீங்க?" என அவளை நோக்கி கையை நீட்ட, அவனை ஒரு முறை பார்த்தவள் பின் அங்கு அப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.