ஒருத்தன் நிற்கவே இல்லை என்பதை போல ரோட்டில் பார்வையை பதித்தாள். தன் கையை இழுத்து கொண்டவனுக்கு என்ன இவள் ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல பார்க்கிறாள் என்று எண்ணும் போதே அவனை தாண்டி வேகமாக சென்றவள் அங்கு வந்த அதே காரில் ஏறி கிளம்பி சென்று விட்டாள்.
இவனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது, நல்லவேளை நண்பர்கள் யாரும் இந்த கொடுமையை பார்க்கவில்லை என்று எண்ணியவனுக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றியது. ஒரு வேளை அவளுக்கு காது கேட்காதோ, இல்லை வாய் பேச வராதோ. ஐயோ பாவம் அதனால் தான் எதுவும் பேசாமல் சென்றாள் போல என்று எண்ணியவனின் எண்ணத்தை அடுத்த முறை அவளை அவன் அந்த இடத்தில் பார்க்கும் போது நடந்த நிகழ்வு பொய்யாக்கியது.
அன்றும் அவன் சரியாக அதே நேரத்தில் அந்த காபி ஷாப்பை அடையும் போது அவள் அங்கே இருந்தாள். இவன் எப்படி பேசலாம் என யோசித்து கொண்டிருக்கையிலேயே ஒரு கர்ப்பிணி பெண் தடுமாறி கீழே சாய போக, ஓடி சென்று அவரை தாங்கியவள், "ஐயோ அக்கா பார்த்து வரலாம்ல" என அவளை கைத்தாங்கலாக பிடித்து அங்கே அமரவைத்தாள்.
அதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு அடிப்பாவி என்று இருந்தது. தன்னுடைய கற்பனை வளத்தை எண்ணி அவனே தன் தலையில் மானசீகமாக கொட்டி கொண்டான். ஆனாலும் அவளை அவனுக்கு பிடிக்கவே செய்தது.
எப்படியோ அப்படி இப்படி அலைந்து அவள் அங்கு அருகே இருந்த கல்லூரியில் பிகாம் முதல் வருடம் படிக்கிறாள், அவள் பெயர் பவித்ரா என்பதை அறிந்து கொண்டான். ஒருமுறை அவளின் காரை தொடர்ந்து அவளின் வீடு வரை வந்தான். அவள் அந்த நூலகத்திற்கு வராத சமயங்களில் அவளின் வீட்டின் புறம் இரண்டொரு முறை சென்று பார்த்தான். ஆனால் அங்கு அவளை பார்க்கவே முடியவில்லை.
எப்படியாவது அவளிடம் இன்னொரு முறை பேசி விட வேண்டும் என நினைத்தான். அன்று அந்த சாலை வழியாக ஏதோ ஒரு விஐபி செல்வதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஒவ்வொரு வாகனமாக பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர். அதனால் அவளின் வண்டியும் வர தாமதமானது போல இருந்தது. இவள் கையில் அந்த நூலகத்தில் இருந்து எடுத்த புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தாள்.
"ஹலோ " -சத்யாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவள் பின் மீண்டும் பார்வையை புத்தகத்தில் திருப்ப, இவனோ இந்த முறை விடுவேனா என மீண்டும் பேசினான்.
"ஏங்க அன்னைக்கு பேச வந்தப்போ நீங்க என்னமோ என்னை கல்லு மண்ணு மாதிரி