(Reading time: 18 - 35 minutes)
Kaarigai
Kaarigai

பார்த்துட்டு போயிட்டீங்க. நான் கூட பாவம் காது கேக்காதோன்னு நெனைச்சுட்டேன். ஜஸ்ட் பேச தாங்க வந்தேன். வேற ஒண்ணும் இல்லை. ஏதோ பாக்கற எல்லா பொண்ணுங்கள்ள நீங்க வித்தியாசமா இருக்கீங்க. அதான் பேசணும்னு தோணுச்சு" அவன் விளையாட்டு போக்கில் பேச இவள் நிமிர்ந்து ரோட்டை பார்த்தாள். தூரத்தில் அவளின் கார் வரவும் அவனை தாண்டி செல்ல முயல, அவனோ மீண்டும் விளையாட்டாக தொடர்ந்தான். அவள் முன்னே சென்று நின்றவன், "ஏங்க ஒரு ஹலோ சொல்லிட்டு போனா என்ன?" அவள் முன் தலை சாய்த்து அவன் கேட்க, "என்னமா ஏதாவது பிரச்சனையா?" என ஒரு பெண் குரல் கேட்கவும் திரும்பி பார்த்தான். ஒரு பெண் போலீஸ் அங்கு நின்றிருந்தார்.

"அதெல்லாம் இல்லை மேடம். ஜஸ்ட் பேசிட்டு இருந்தோம்" இவன் சொல்ல, "இல்லையே நானும் அங்கே இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். நீ தான் பேசிட்டு இருக்க, அந்த பொண்ணு உன்னை கண்டுக்கவே இல்லை. என்ன லவ்வா? இப்படி பொண்ணுங்க பின்னாடி சுத்த வேண்டியது அப்பறம் அந்த பொண்ணு பேசலைன்னு மேல ஆசிட் ஊத்த வேண்டியது. அப்படி தான? " அவர் கேட்கவும், "மேடம் என்ன நீங்க இப்படி எல்லாம் சொல்றிங்க, அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் கேஸுல் டாக் தான். வேணா அவங்களையே கேளுங்க" சத்யா சொல்லவும் அவளிடம் திரும்பியவர், "ஏம்மா உனக்கு இவனை தெரியுமா?" கேட்க, இல்லை என தலை அசைத்தவள், "என் கார் வருது மேடம். நான் கெளம்பனும்" என்று சொல்லவும் "நீ போம்மா நான் இவன் கிட்ட பேசிக்கிறேன்" என்று சொன்னார். அவனை திரும்பி கூட பார்க்காமல் அவள் விரைந்து செல்ல, அந்த பெண் போலீஸ் அவனை விசாரணை செய்ய என அழைத்து கொண்டு அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு கூட்டி சென்றார்.

"மேடம் நீங்க தப்பா நினைச்சுட்டு என்னை கூட்டிட்டு வந்துருக்கீங்க" -சத்யா

"அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ வாய மூடிட்டு உக்காரு " என்றவர் அங்கிருந்த சேரில் அமர்ந்து ஏதோ வேலையை பார்க்க, இவனுக்கு பொறுமை பறந்தது.

"எனக்கு கெளம்பனும் மேடம்" என்றவன் எழ, "அடிங்க என்ன நீ பெரிய இவனா? உக்காரு மரியாதையா " என லத்தியுடன் அவன் அருகே வந்தார் அந்த போலீஸ். அதற்குள் உள்ளே நுழைந்தார் அந்த பகுதி இன்ஸ்பெக்டர்.

"என்னம்மா என்ன பிரச்சனை?" -இன்ஸ்பெக்டர்

"சார் ஈவ் டீசிங் கேஸ். ஓவரா பேசறான்" - பெண் போலீஸ்

"சார் இல்லை சார். ஈவ் டீசிங் எல்லாம் இல்லை சார். நான் சாதாரணமா தான் பேசிட்டு இருந்தேன். இவங்க தான் தேவை இல்லாம புடிச்சிட்டு வந்துட்டாங்க. என்னை போக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.