(Reading time: 9 - 17 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அதிகரிக்கலாம். ஆனால் அதுபோலவே கேன்சர்   நோயை உருவாக்கும் மரபணுவிலிருந்து அதற்குரிய டிஎன்ஏ மூலக்கூறை எடுக்க முடியாது. இவ்வாறு தேவையில்லாத டீடெய்ல்ஸை மரபணுவிலிருந்து எடிட் செய்வது ஜீன் எடிட்டிங் ஆகும். இப்போது நான் செய்வது அதைத்தான்.”

“ஓ…”

“புரியுதா…”

“ஓரளவிற்கு… மரபணுவில் தேவையானதை சேர்க்கவும் செய்யலாம். தேவையில்லாத்தை நீக்கவும் செய்யலாம்.”

“கரெக்ட்… “

“ஒரு வகையில் கல்யாணம்கூட மரபணு மாற்றம்தான். நம்ம கல்யாணம் நமக்கு தேவையான எதையாவது தந்திருக்கா? இல்லை நாம செய்யப் போற விவாகரத்து தேவையில்லாத எதையாவது விலக்கப் போகிறதா?”

“ஹா… என்னமா கேட்டுட்டே? நாம் இதை ஒரு பட்டியல் போட்டுதான் கண்டுபிடிக்கணும். ப்ளஸ் பாயிண்ட்ஸ்னா என்னுடைய அம்மா விரும்பியதை செய்துட்டேன். எனக்கு பிடித்த மாதிரி நீ இருப்பதும் ப்ளஸ்தான். எதிர்கால சந்ததின்னு யோசிக்கறப்போ…   நிதானமாக யோசித்து மூளை சொல்லும் முடிவுகளை எடுக்கும் எனக்கும்… மனம் சொல்வதை கேட்டு முடிவு எடுக்கும் உனக்கும்… குட்.. நம்ம காம்பினேஷன் வொர்க்-அவுட் ஆகும்.”

“அப்படியா… நான் கேட்கும் டைவர்ஸ்கூட உங்களுக்கு மோசமான எதிர்காலத்திலிருந்து விடுதலை தரலாம்.”

“அது மோசமான எதிர்காலம்… பத்து வருடம் உயிராக நினைத்து வாழ்ந்த மனைவி மீது  நம்பிக்கை வைக்காமல் மலை உச்சியிலிருந்து குழந்தைகளை தள்ளி விட்டுட்டு தானும் செத்து போறதா? என்னை பார்த்தால் படிக்காத முட்டாள்போல தோன்றுகிறதா?”

“எங்கப்பா ஒன்றும் படிக்காத முட்டாள் அல்ல. அவரும் ஒரு மருத்துவர்தான்… சுற்றி இருக்கும் பத்து கிராமங்களுக்கும் அவர்தான் வைத்தியம் செய்வார்.”

“ஹா… டாக்டர்னா எல்லாம் தெரிஞ்சிருக்கும் என்று அர்த்தம் கிடையாது.”

“ஓ… நீங்க அப்படி ஒரு சூழல்ல என்ன செய்திருப்பீங்க?”

“ஐ வில் அனாலைஸ்… இது நம்பிக்கையும் பொறுப்பும் சார்ந்த விசயம். எனக்கு ஒருவர் மீது முழு நம்பிக்கை இருந்தது என்றால்… நான் அவர்களை சந்தேகிக்க மாட்டேன் அந்த சூழலைதான் சந்தேகிப்பேன். உண்மையிலேயே தவறு  நடந்திருந்தாலும்… அதற்கான காரணத்தை ஆராய்வேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.