(Reading time: 9 - 17 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 08 - சாகம்பரி குமார்

வனுக்குள் குறுகுறுத்த உணர்வை ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடைய வேலையைபற்றி அதிதியிடம் விளக்கினான்.

“மரபணு ஆராய்ச்சி ரொம்ப வருடங்களாக நடைபெற்று வருகிறது. பெயரிலிருந்தே தெரிகிறதல்லவா,,, மரபணு என்பது மரபு அதாவது பாரம்பரியம் தொர்புடையது. மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரிகளுக்கும் இது உண்டு. ம்… மரபணுவில் அந்த உயிரின் இனத்தின் குணங்கள் பதியப்பட்டிருக்கும். புதிதாக உருவாகும் உயிர் இந்த மரபணுவில் இருக்கும் விவரங்களை வைத்துதான் தன்னை டிசைன் செய்து கொள்கிறது. உருவ அமைப்பு… குணம்… சிந்தனைகள் அனைத்தும் இந்த விவரங்களில் இருக்கும்”

“ஆங்… புரிகிறது. அப்பாவைபோலவே மூக்கு, தாத்தாவைபோல இனிப்பை விரும்பி சாப்பிடுகிறது… என்பதெல்லாம் இதுதானே.”

“கரெக்ட்… மரபணுவில் இதுபோன்ற முன்னோர்களின் ட்ரெய்ட்ஸ்கூட இருக்கும்.”

“ நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்களைபற்றிய எல்லா விவரங்களும் இருக்குமா. அது எப்படி எழுதி இருக்கும்?”

“அது எழுத்தாக இருக்காது. டிஎன்ஏ எனப்படும் அமினோ அமிலங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். சங்கிலி தொடர்போல அமைந்திருக்கும் அந்த மூலக்கூறுகளை கொண்டு கருவிலேயே உருவாக்கப்படுகிறது”

“எவ்வளவு இருக்கும்?”

“அது இருக்கும் கோடி கணக்கில்… ஆனால் நம்முடைய உருவாக்கம் சில விவரங்களை மட்டும் எடுத்து கொள்ளும். சில விவரங்களை நாம் வளர வளர டிசைன் செய்து கொள்ளுவோம்”

“ஓ…”

“ஒரு உயிரின் வடிவம்… குணாதிசயம் அனைத்தும் மரபணுவிலிருந்து கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிக்காரணிகளால் அவை மாறவும் செய்யலாம். ம்.. உதாரணமாக சில சமயம் வைரஸ் பாக்டீரியா போன்றவற்றால்கூட இந்த மாற்றங்கள் நடைபெறலாம்.

“ஓ…”

“ஜீன் அணுவின் விவரங்களை இரண்டு வகையான ஜீன்களை கலப்பதன் மூலம் மாற்றியமைக்கலாம். இதற்கு ம்யூட்டேஷன் என்று பெயர்”

“இதுதான் பிடி கத்தரிக்காய். விதையா?”

“அது பாக்டீரியா வைத்து செய்யப்பட்டது. ஓகே, இது போன்ற மாற்றங்களில் புதிதாக ஒரு விசயத்தை சேர்க்கலாம் ஆனால், இருப்பதை எடுக்க முடியாது. உதாரணமாக காய்கள் புழு தாக்காமல் இருக்க காட்டு செடியின் மரபணுவை வைத்து அதனுடைய எதிர்ப்பு தன்மையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.