(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“இது எதற்கு அதிதி?”

“பல்லு விளக்கத்தான்….”

“சூப்பர்… அப்புறம் குளிக்கும் சோப்பிற்கு ஏதாவது ஐடியா இருக்கா?”

“அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன். அதை தேய்த்தால் நுரை வரும். போட்டு குளிக்கலாம்.”

“நல்லவேளை ஒரு ஸ்பேர் ட்ரஸ் இருக்கு. இல்லைனா இலைதழைகள  கொண்டு ஆடையும் தயார் செய்திருப்பாய்”

“ஜோக்கா..? சரி… நைட் நல்லா தூங்கினீங்களா?”

“ஆமாம் நல்ல தூக்கம்தான்… நீ தூங்கிட்டியா? அம்மா கனவு வந்துச்சா?”

“அதெப்படி சரியா சொல்றீங்க. கனவு வந்துச்சு… கனவுல அம்மா வந்தாங்க… ஒரு விசயம் சொன்னாங்க“

“பேசவும் செய்தாங்களா? நல்ல முன்னேற்றம்… என்ன சொன்னாங்க?”

 'அதுவும்' இங்கே வந்திருக்குமோ?

பேசிக் கொண்டே ஆற்றின் கரையை அடைந்து விட்டார்கள். அவள் பதில் சொல்லப் போகும்போது,

“ரதன் சீக்கிரம் என் பின்னே வாங்க?” அவள் பரபரத்தாள்.

அவள் பின்னால் விரைவாக நடந்தவன்...

“என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“அவனுடைய கையை பிடித்து பாறைகளில் ஏறியவள், கொஞ்சம் தொலைவில் இருந்த உயரமான குன்றை காட்டி ,

“அதுமேல போய் உட்கார்ந்துக்கலாம்” என்று விரைந்தாள். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவள் சொன்னபடி விரைந்து சென்று அந்த பாறையில் ஏறி  அமர்ந்தான். அவன் அருகில் அமர்ந்தவள் ஆற்றங்கரையை ஆர்வமாக பார்த்தாள்..

“அங்கே என்ன இருக்கு?” என்றபடி அவனும் பார்த்தான்.

வாவ்! திடும் திடுமென்று பூமி அதிர சிறு குன்றுகள்போல காட்டு யானை கூட்டம் வந்தது. பெரிய யானைகளுடன் குட்டி யானைகளும் குடுகுடுவென ஓடி வந்தன. தண்ணீரை பார்க்கவும் சலசலப்பு கிளம்பியது.

“அவங்க குளிக்க போறாங்க… பேமிலியா வந்திருக்காங்க”

“மூணு ஆண் யானை…  ஐந்து பெண் யானைகள்… ரெண்டு குட்டிகள் வேற… பெரிய ஜாயிண்ட் ஃபேமிலிதான் போலிருக்கு”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.