(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

மீண்டும் யானை குட்டியா?

“ஓகே அதிதி… நாம் வந்த வேலையை செய்யலாமா?”

“குளிப்பதையா…? முதலில் நீங்கள் குளிங்க… நான் இந்த துணிகளை பார்த்துக் கொள்கிறேன்.”

“இங்கே யே இருக்கட்டும். யார் எடுக்க போகிறார்கள். “

“மிஸ்டர் மங்கி… அழகாக எடுத்துக்குவார் ரதன். ஒரு முறை என்னுடைய குட்டி ஸ்கர்ட்டை எடுத்துட்டு ஓடிடுச்சு”

“அதோட மனைவிக்கு ரேம்ப் வாக் செய்ய கொடுத்திருக்கும்”

“ரேம்ப் வாக்…? மேடையில  நடந்துகிட்டே இருப்பாங்களே அதுதானே”

“அதேதான்…  ஒரு லேடி மங்கி ஸ்கர்ட் போட்டுகிட்டு.."

"ரொம்ப அழகாக இருக்கும்" கண்ணை மூடி கற்பனை செய்து பார்த்து சிரித்தாள்.

"இப்போ நீங்க குளிக்க போறது இல்லை…"

"ஆஹாங் என்ன வார்த்தை சொல்லிட்டே. குளிக்காமல் பச்சை தண்ணிகூட பல்லுல படாது. நீ முதல்ல குளிச்சிட்டு வந்த நல்லா இருக்கும்னு நினைச்சேன்."

அந்த ஆற்று நீர் தெளிவாக இருந்தாலும் அதனுடைய ஆழம்பற்றி தெரியாது. அந்த இடத்திற்கு  பழக்கப்பட்ட அதிதி எந்த இடத்தில் குளிக்கிறாளோ அங்கேதான் குளிக்க வேண்டும். அதனால்தான் இந்த மாஸ்டர் ப்ளான்!.

"சரி.. சரி.. நானே குளிக்கிறேன். அந்த பக்கம்தான் ஆழமாக இருக்காது."

"நான் இங்கேயே வெயிட் பண்றேன்."

அவள் சென்றபின்தான் அவனுக்கு தோன்றியது… குரங்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டிருக்கலாம்.. செல்போன் இருந்தாலாவது அதில் விவரம் தேடி இருக்கலாம்.

ஒரு விசயம் அவனுக்கு தெரியும். அதை பார்த்து ஸ்மைல் பண்ணக் கூடாது. அதுங்களை சண்டைக்கு அழைக்கும் சைகையாகும்.

 அவன் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு தரையில் தட்டிக் கொண்டு வாட்ச் டவரில் இருப்பதுபோல அலர்ட்டாக இருந்தான். வேர் ஆர் யூ கைய்ஸ்...

அதே சமயத்தில் வினய் கொஞ்சம் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் கையில் இருந்த ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.

அது ஒரு பழைய ஆராய்ச்சி ரிப்போர்ட்.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட மரபணு மாற்றம் பற்றியது. அதில் என்ன குழப்பம் இருந்தது?  

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to Marulathe maiyathi nenche story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.