(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இருக்கிறார்கள் என்பதும்”

“அதனால”

“ நாங்கள் உயிர் வாழனுமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கு மட்டும் இருப்பதாக நினைச்சிருக்கலாம். தேவையில்லாததை தூக்கி எறிவதுபோல…”

அவள் குரல் மெல்லியதாக கேட்க ஆரம்பித்தது. அதிரதனால் அவளுடைய உணர்வினை புரிந்து கொள்ள முடிந்தது. எட்டு வயது சிறு குழந்தை… என்ன ஏது என்றே புரிந்து கொள்ளும் மலையிலிருந்து தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியான விசயம்தான்.

“அப்பா கோபமாக இருக்கிறார் என்று எனக்கு புரிந்தது. இரண்டு கையிலும் அக்காவையும் என்னயும் தூக்கிக் கொண்டு மலையிலிருந்து குதித்தபோதுகூட எதுவும் புரியவில்லை. அவர்தான் உடன் இருக்கிறாரே என்று அவரை கட்டி பிடிச்சுகிட்டேன். அவர் என்ன நினைத்து இதனை செய்தார் என்று அப்போதும் சரியாக விளங்கவில்லை… இப்போதும் விளங்கவில்லை.”

அவனுக்கும் அதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. அவர் என்ன நினைத்திருக்கலாம் என்று ஊகிக்கலாம் ஆனால் அதுதான் சரியானது என்று சொல்ல முடியாது.  அவமானத்தால் குடும்பத்தையே அழிக்க நினைத்திருக்கலாம்… தனக்கு பிறகு குழந்தைகள் அசிங்கப்பட வேண்டாமென்று நினைத்திருக்கலாம்…

“ஒருவேளை நாங்கள் அவருடைய குழந்தைகள் இல்லை என்று நினைத்திருப்பாரோ?”

“?”

“அம்மா ஆரம்பத்திலிருந்தே அவரை ஏமாற்றியதாக நினைத்திருக்கலாமா?”

காலை வெயில் அவள் முகத்தில் படிந்து அவமான சிவப்பை பளீரென்று காட்டியது. மை காட்… இதுபோல நினைத்து நினைத்து அவள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள். தன்னையே அவமானச் சின்னமாக நினைத்திருந்திருக்கிறாள்…. அவளை அந்த நினைவிலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டும்.

“அதிதி… அங்கே பார் அந்த யானை கூட்டம் குளித்து முடித்து கிளம்புகிறது” அவன் சொல்லவும்,

“ஆமாம்.. அது பரேட்போல போகும்”

“காட்டு யானகள் அலப்பறை செய்து கொண்டு போகும் என்று சொல்வார்கள்.”

“இல்லை… அது தனித்து வரும் யானைதான் அப்படி செய்யும். மரக்கிளைகளை முறித்துபோட்டு… தூசு மண் கிளப்பிக் கொண்டு அப்படியும் இப்படியுமாக போகும். கூட்டமாக போகும்போது ஒரு ஒழுக்கம் .இருக்கும். அங்கே பாருங்கள் அந்த குட்டிகூட ஒழுங்காக போகிறது”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.