(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

கேட்டு இருக்கேன்... இப்போ யோசிக்கும்போதுதான் நினைவு வந்துச்சு....”

“ஓ உங்களுக்கு சரியா எப்போ இது நடந்ததுன்னு நியாபகம் இருக்கா....”

“அவ இறந்து போகறதுக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி இருக்கும் சார்.... அன்னைக்கு நானும், அவளும் கன்னிமரா லைப்ரரி போகறதா இருந்தோம்... அவ காதலன்கிட்ட இருந்து போன் வந்ததால போக முடியலை....”

“ஹ்ம்ம் அம்மா அன்னைக்கு நாங்க சாந்தி ரூம் சரியா செக் பண்ணலை.... இன்னைக்கு பார்க்கலாமா....”

“நீங்க பேசறது எல்லாம் கேக்கும்போது என் பொண்ணா இதுன்னு இருக்கும்மா.... இன்னும் அவளைப் பத்தி என்னல்லாம் பூதம் கிளம்ப போகுதோ…. நீங்க போய் பாருங்க.... ஆனா அங்க எதுவும் கிடைக்குமான்னுதான் தெரியலை.... போலீஸ்காரங்க கிட்டத்தட்ட ஏழெட்டு முறை அந்த ரூமை சோதனை பண்ணிட்டாங்க....”

“இருக்காலாம்மா எதுக்கும் எங்க திருப்திக்கு நாங்களும் ஒரு முறை பார்க்கறோமே,,,,”

சாந்தியின் தோழியுடன் சாரங்கனும், பாரதியும் அவள் அறையை ஆராய ஆரம்பித்தார்கள்....  சாந்தியின் அறை ஒரு கப்போர்ட், புத்தக அலமாரி படிக்கும் மேசை, நாற்காலி என்று கச்சிதமாக இருந்தது...

“எல்லாம் இருக்கு கட்டில் மட்டும் காணும்....”

“சாந்திக்கு ராத்திரில தனியா இருக்க எப்பவுமே பயம் மேடம்... அதனால அவங்க அம்மா கூடத்தான் படுப்பேன்னு அவ சொல்லி இருக்கா....”

“ஓகே சாரங்கா நீ அந்த புத்தக அலமாரி பாரு... நீங்க அவங்க டிரஸ் கப்போர்ட் செக் பண்ணுங்க... நான் அவங்க லேப்டாப்ல எதுனாச்சும் விஷயம் கிடைக்குதான்னு பார்க்குறேன்...”

மூவரும் அடுத்த அரை மணி நேரத்திற்கு சாந்தியின் அறையை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்தார்கள்...

“ஹே பாரதி இந்த பக்கத்தை பாரு....”, சாரங்கன் பாரதியிடம் பதறியபடியே புத்தகத்துடன் வந்தான்....

“சந்தியாக்குட்டி எம்புட்டு நாளாச்சு.... மாமனும், நீயும் இப்படி தனியா சுத்தி.... எப்போ பாரு... குற்றம் நடந்தது என்னன்னு... ஒரே குஷ்டமப்பா... இன்னிக்கு அஜால் குஜால்தான்...”

“ஹலோ மிஸ்டர் ஆபீசர் இப்போவும் நாம அதே குற்றத்தை கண்டுபிடிக்கத்தான்  போய்க்கிட்டு இருக்கோம்... அதனால குஜால்ஸ் மோடுலேர்ந்து கடமை மோடுக்கு வாங்க...”

“யாரு சொன்னா கடமை செய்ய போறோம்ன்னு... நாம காதலிக்க போறோம் பேபி.... நேரா பீச் போறோம்.... அங்க இருந்து மூவி.... அப்படியே ஹோட்டல்.... எப்படி பிளான் சூப்பர்ல....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.