(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

சொல்லிட்டேன்... சரி சார்... சொல்லுங்க... உங்களுக்கு என்ன தெரியணும்....”

“அன்னைக்கு அந்த ரூம்க்கு மொத்தம் எத்தனை பேர் வந்தாங்க.... ரூம்க்கு வெளிய யாராச்சும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களா.....”

“ரெண்டு பேர் வந்தாங்க சார்... வெளிய யாராச்சும் இருந்தாங்களான்னு தெரியலை... நான் அவங்க வர்ற முன்னாடியே ரூம்ல இருந்தேன்....”

“ஹ்ம்ம் அவங்க வந்த பின்னாடிதான் அந்த பொண்ணு வந்துச்சா....”

“ஆமாம் சார்... அவங்க வந்த பிறகுதான் அந்தப் பொண்ணு வந்துச்சு....”

“நீ இருக்கறது அவங்களுக்கு எப்படி தெரியாம போச்சு....”

“நான் இருந்த இடம் கொஞ்சம் பின்னாடி இருந்துச்சு சார்.... ரெண்டு ஷெல்ப்பு வேற நடுவுல இருந்தது... நான் அது பின்னாடி துடைச்சுட்டு இருந்தேன்... அதால சத்தம் கேட்டிருக்காது...”

“மொதல்ல ஒரு டாக்டர் மயக்க ஊசி போட்டதாகவும், அந்த பொண்ணு மயங்கின உடனே அடுத்த டாக்டர் கொலை செய்ததாகவும் நீ சொன்னதா சந்தியா சொன்னா... அதுக்கு முன்னாடி அந்த பொண்ணுக்கிட்ட எதாச்சும் பேசினாங்களா...”

“இல்லை சார்... அந்த பொண்ணு வந்து கூப்பிடீங்களான்னு கேட்டுட்டு வந்து நின்னுச்சு... நானே அந்த சத்தம் கேட்டுத்தான் எட்டி பார்த்தேன்... அது பக்கத்துல வந்த உடனே ஊசி போட்டுட்டாங்க... ஒரு செகண்ட்தான் உடனே மயங்கிடுச்சு....”

“ஹ்ம்ம் அவங்க ஊசி போட்டாங்கன்னு சொன்னியே... அது எதாச்சும் அவங்க போனபிறகு பார்த்தியா,,,”

“இல்லை சார்... அவர் ஊசி போட்டுட்டு அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டார்... அந்த கத்தி மட்டும்தான் அங்க விட்டுட்டு போனாங்க.....”

“தம்பி... இந்த கேஸ்ல நீ ஒருத்தன்தான் கண்ணால பார்த்த சாட்சி... அதனால கண்டிப்பா உன்னோட ஒத்துழைப்பு வேணும்...”

“எனக்கு இதுனால எந்த பிரச்சனையும் வரக்கூடாது சார்.... அப்படி வராதுன்னா கண்டிப்பா நான் ஹெல்ப் பண்ணுறேன் சார்.. ஏற்கனவே எங்க சொந்தக்கார  பையன் ஒருத்தன் கொஞ்சம் மாசம் முன்னாடிதான் போலீஸ் லாக்அப்ல செத்துப்போனான்.... அதுல இருந்து போலீஸ், கேஸ்னாவே எங்க குடும்பத்துக்கே அலர்ஜி சார்...”

“அது யாருப்பா அந்த பையன்... எப்படி செத்துப்போனான்...”

“அவன் பேரு மணி சார்...”, பேரை சொன்னவுடன் சந்தியாவும், சந்தோஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்...

“பேப்பர்லலாம் கூட வந்துச்சே... ஒரு பொண்ணை ரோட்டுல போட்டு வெட்டிட்டான்னு...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.