(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“இல்லை இல்லவே இல்லை.... நீங்க இந்த ரூட் மாறிப் போற வேலையே வேணாம்.... நேரா முத்து வீட்டை பார்த்து வண்டியை விடுங்க.... இல்லைன்னா ஒரு மைனர் பொண்ணை மைனர் கடத்திட்டார்ன்னு கம்ப்ளைன்ட் கொடுத்துடுவேன்...”

“அடியேய் நீ மைனரா... உனக்கே நீ பேசறது அபாண்டமா தெரியலை.... சரோஜாதேவியை சமந்தான்னு சொன்னாமாதிரி சொல்ற.....”

“ஐயே நீங்களும் உங்க ஒப்பிடலும்.... சகிக்கலை... சரி காலேஜ் மேட்டர் எந்த அளவுல இருக்கு.... அந்த தற்கொலை பத்தி யாரும் எதுவும் பேச மாட்டேங்கறாங்க.....”

“அதுதான் யாரும் அது பத்தி பேசக்கூடாதுன்னு சர்க்குலர் வந்துச்சே... பேசினா கடும் நடவடிக்கைன்னு தெரிஞ்ச பிறகும் எவன்னா பேசுவானா....”

“ஸ்டுடென்ட்ஸ் சரி... டீச்சர்ஸ் கூடவா அதை பத்தி பேசறதில்லை....”

“பசங்க பரவாயில்லை... இங்க டீச்சர்ஸ் இன்னும் மோசம் சந்தியா... எதை பத்தியும் வாயைத் திறக்க மாட்டேங்கறாங்க....”

“ஹ்ம்ம் அந்த left எடுங்க சந்தோஷ்...அந்த சந்து கார்னர்ல ஒரு கோவில் இருக்குது... காரை அங்க நிறுத்திட்டு நாம நடந்து போவோம்... அதுதான் safe... பத்து நிமிஷம் நடந்தா அவன் வீடு வந்துடும்...”, கோவில் வாசலில் காரை நிறுத்திவிட்டு முத்துவின் இல்லம் நோக்கி சந்தியாவும், சந்தோஷும் நடந்தார்கள்....

“வாக்கா,,,, என்னா நம்ம காலேஜ் சார்கூட வந்திருக்க,,,,”

“முத்து அந்த காலேஜ்ல செத்து போச்சே அந்த பொண்ணு விஷயமா பேச வந்தோம்டா....”

“எக்காவ் உன்னாண்ட யார் கைலயும் சொல்லாதன்னு சொன்னேன் இல்லை... இன்னாத்துக்கு சாராண்ட சொன்ன....”

“பயப்படாத முத்து.... நீ சொல்ற விஷயம் எதுவும் வெளிய போகாது.... அதேப்போல உனக்கும் எந்த துன்பமும் வராது... நான் உத்தரவாதம் தரேன்...”

“இதோ இந்தக்காவும் அதேதான் சொல்லிச்சு... இப்போ உங்களை கூட்டிட்டு வந்துடிச்சு...  அடுத்து பெரிய சார், முதலாளி அப்படின்னு வரிசையா கூட்டிட்டு வரும்... கடைசில அந்த பொண்ணு மாதிரியே எனக்கும் ஒரு ஊசியைப் போட்டு ஜோலியை முடிச்சுடுவாங்க....”

“டேய் அப்படிலாம் அக்கா ஆக விடுவேனாடா... இவர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர்டா... அதுவும் இல்லாம அந்த பொண்ணு பாவம் இல்லை.... அவளுக்கு நியாயம் கிடைக்க வேணாம்.... அதுக்குதாண்டா....”

“நீ சொல்லுறதும் சரிதான்... ஆனா எனக்கு இதுனால எந்த பிரச்சனையும் வரக்கூடாது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.