(Reading time: 11 - 21 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

உதவிக்கிட்டு இருக்கோம்," என்று அவர் சொல்ல,

"உண்மையாவா பாட்டி, மாமா ட்ரஸ்ட் மூலமா நிறைய பேரோட படிப்புக்கு உதவறாங்களா?" என்று நித்யா வியப்போடு கேட்டாள்.

"ஆமாம் நித்தி, முதலில் நம்ம வீட்டில் முன்ன வேலை செய்தவங்களோட பிள்ளையை ஸ்கூல் படிப்போட நிறுத்திட்டாங்க, ஆனா அந்த பையனுக்கு காலேஜ்ல போய் படிக்க ஆசை. எங்களுக்கு அந்த அளவுக்கு வசதியில்லைன்னு அந்தம்மா இங்க என்கிட்ட புலம்பிக்கிட்டு இருந்ததை கார்த்தி கேட்டான். அதுக்குப்பிறகு அந்த பிள்ளையோட படிப்பு செலவை நானே பார்த்துக்கிறேன்னு சொன்னான். அதிலிருந்து ஆரம்பிச்சது தான், அப்புறம் அவனோட அம்மா பேர்ல ட்ரஸ்ட் ஆரம்பிச்சு இப்போ நிறைய பேரோட படிப்பு செலவுக்கு கார்த்திக் உதவறான். அதுவும் பெண் பிள்ளைங்களோட படிப்புன்னா யோசிக்காம உதவி செய்வான்." என்று குறிஞ்சியம்மாள் விளக்கமாக கூறினார்.

அதைக்கேட்டு நித்யா கார்த்திக்கை நினைத்து பெருமையாக உணர்ந்தாள். இப்படி நிறைய பேரோட படிப்பு செலவுக்கு உதவும் அவங்களுக்கு கொஞ்சம் மக்கு பொண்டாட்டியா நான் வந்து சேர்ந்திருக்கேனே, இப்போ மாமாக்கு மட்டும் என்னை காலேஜ்ல போய் சேர்த்து படிக்க வைக்கணும்னு தோனாம இருந்திருந்தா, நான் இன்னும் மக்கு பொண்டாட்டியாகவே இருந்திருப்பேன். அதனால் அவருக்கு தானே வெளி இடத்தில் அவமானமா இருக்கும்.” என்று நினைத்து பார்த்தவள், கார்த்திக் வந்ததும் அதை தயங்காமல் அவனிடம் வெளிப்படுத்தினாள்.இப்போதெல்லாம் மனதில் நினைப்பதை அவனிடம் வெளிப்படுத்த அவள் தயங்குவது இல்லை.

அவள் சொன்னதற்கு கார்த்திக்கோ, “ஆமாம் அவமானம் தான் படணும், ஆனா காலேஜ்க்கே போய் படிக்காத மக்கு பொண்டாட்டி கிடைச்சிருக்குன்னு நினைச்சு இல்லை, ஊரில் நிறைய பேர் படிக்க உதவும் நான், நீ இங்க வந்து எத்தனை நாள் ஆகுது. அப்போதே உன்னோட படிப்பை பத்தி கேட்டு காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்காம இருந்துட்டனே, ஒருவேளை அப்போதே உன்னை காலேஜில் சேர்த்திருந்தா, பாட்டி நம்ம கல்யாணப் பேச்சை எடுத்திருப்பாங்களா? நீயும் இவ்வளவுசீக்கிரம் குடும்ப வாழ்க்கையில் சிக்காம ஜாலியா இருந்திருக்கலாம், அப்போ உன்னை படிக்க வைக்கணும்னு எனக்கு தோனாம போச்சு பாரு, இதுக்கும் நீ யாரோ இல்ல, என்னோட அத்தை பொண்ணு தான், ஆனா உன்னை யாரோ மாதிரி தானே நினைச்சு அக்கரையில்லாம இருந்துட்டேன்.” என்று அவன் வருத்தமாக சொல்ல,

“அய்யோ மாமா, இப்போல்லாம் நீங்க அடிக்கடி இப்படி புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க, இதையே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.