தொடர்கதை - காரிகை - 08 - அமுதினி
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கதான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
"பாப்பா கொஞ்சம் நேரா பாரும்மா" போட்டோக்ராபர் சொல்ல நேராக அமர்ந்தாள் பவித்ரா. அவளின் மடியில் அமர்ந்திருந்தாள் உமா. கண்ணம்மாவும் மாறியப்பனும் பின்னே நிற்க போட்டோக்ராபர் ரெடி என்றதும் அவளின் தோளின் மேல் அழுந்த படிந்த கையின் ஸ்பரிசத்தில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்த பவித்ராவின் முகம் சிரிப்பதை நிறுத்த அவளின் சிரிப்பு இல்லாமலே பதிவானது அந்த புகைப்படம்.
அந்த பூப்பு நீராட்டு விழாவுக்கு பின் ஆட்கள் எல்லாம் கிளம்பியதும் மறக்காமல் அவள் அணிந்திருந்த காதணிகளை வாங்கி வைத்து கொண்டாள் கண்ணம்மா. அந்த வார இறுதியில் மாரியப்பன் வரவும் சமயலறையில் அசைவ சமையலில் கண்ணம்மா பிசியாக இருக்க, "கண்ணம்மா கண்ணம்மா" என்ற மாரியப்பனின் குரல் கேட்கவும், "என்னய்யா எத்தனை தடவை கூப்பிடுவ? அப்பறம் மத்தியானம் பசிக்குது பசிக்குது காத்த வேண்டியது . நான் வேலை பாக்க வேணாமா?" சமயலறையில் இருந்து பதிலுக்கு கத்தினாள் கண்ணம்மா.
"லேசா தல வலிக்குது புள்ள. கொஞ்சம் காப்பி தண்ணி கொடேன் " மாரியப்பன் சொல்லவும், "இந்தா பவித்ரா, மாமாவுக்கு காப்பி தண்ணி போட்டு கொடு" வெங்காயம் நறுக்கி கொண்டிருந்த பவித்ராவிடம் கண்ணம்மா சொல்லவும் அவளும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு காப்பி தயாராக்கி அவனிடம் கொண்டு சென்றாள் . அங்கிருந்த கட்டிலில் உமா அவன் வாங்கி வந்த பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருக்க, இவளை கண்டா மாரியப்பன் சிரித்தான். எனோ எப்போதும் இல்லாமல் இப்போது அவன் அவளை பார்க்கும் பொது சிரிக்கும் சிரிப்பு வித்தியாசமாக இருந்தது.
"இந்தாங்க மாமா காப்பி"அவனிடம் காப்பியை நீட்டினாள் பவித்ரா.
அவளின் கையேடு சேர்த்து அந்த டம்பளரை பிடித்தவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
"என்ன பவித்ரா ஒரே வாரத்துல அம்சமா வளந்துட்ட " அவன் கையை பிடித்திருப்பது எனோ