(Reading time: 5 - 10 minutes)
Kaarigai
Kaarigai

அவளுக்கு ஒரு வித அசவுகரியத்தை கொடுத்தது.

"மாமா வெங்காயம் வெட்டணும். நான் போகட்டா " என்னவென்று புரியாவிட்டாலும் அங்கிருந்து  போக அவள் மனம் தூண்டியது.

"அய்யே என்ன நீ இப்படி இருக்க . இரு. நான் உனக்காக டவுன்ல இருந்து ஒன்னு வாங்கியாந்துருக்கேன்" என்றவன் அந்த கட்டிலின் அடியே கையை விட்டு துழாவி ஒரு சிறிய கவரை எடுத்தான்.

"இந்தா இதுல மூஞ்சிக்கு போடர பவுடர் பொட்டு எல்லாம் இருக்கு."அவன் கொடுத்ததும் அது வரை இருந்த பயம் எல்லாம் ஓட, அந்த சிறுபெண் மனம் அவன் கொடுத்த பரிசில் மலர்ந்தது.

"இதெல்லாம் இல்லாமையே நீ நல்லா  தான் இருக்க" அவளை பார்த்து ஒரு பெருமூச்சுடன் அவன் சொன்னது அவளுக்கு  புரியவும் இல்லை, கவனிக்கவும் இல்லை.

"ரொம்ப தேங்க்ஸ் மாமா" என்றவள் சிட்டாக ஓடினாள் சந்தோசத்துடன். இதுவரைக்கும் அப்பா என்ற ஒருவரை பார்த்த ஞாபகம் இல்லை. இப்போது மாமாவே உமாவை போல நமக்கும் பரிசு வாங்கி தருகிறார் என்று அவள் மனம் சந்தோஷம் கொண்டது.

அன்று முழுதும் அவள் அதே மகிழ்வுடன் சுற்றி கொண்டிருந்தாள் அவளை இரண்டு கண்கள்வெறியுடன் வட்டமிடுவதை அறியாமல்.

மாலை ஏதோ சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டு அரட்டை அடித்து கொண்டிருந்தனர் அவர்கள் மூவரும். எப்போதும் போல இவள் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டிருக்க, "பவித்ரா இந்தா" என அவளை நோக்கி ஒரு தட்டை நீட்டினான் மாரியப்பன்.

"என்னய்யா இது புது பழக்கம்" கண்ணம்மா முறைக்க, "நீ கம்முனு இரு புள்ள. அக்கம் பக்கம் எல்லாம் அரசல்  புரசலா உன்னை பத்தி தப்பா பேசறாங்க. அந்த நிக்கற கெழவிய பாரு. இங்கயே பாக்குது" திரும்பி பார்த்த கண்ணம்மா பக்கத்து வீட்டு கிழவியை பார்த்து விட்டு திரும்பினாள்.

"சரி சரி கொஞ்சமா கொடு" என்றவள் அதன் பின் அவளின் தட்டில் கவனம் செலுத்த, பவித்ராவுக்கோ நம்பவேமுடியவில்லை.ஆச்சர்யத்துடன் அவன் கொடுத்த தட்டை வாங்கி கொண்டாள் .

"இந்தா கண்ணம்மா அடுத்த தெரு கடைக்கார பாட்டி செத்து போய்டுச்சு. நாங்க எல்லாம் பாக்க போறோம். நீ வரியா?" அடுத்த வீட்டு பெண் விளிக்கவும், "ராத்திரி ஆயிடுச்சே" மண்டையை சொரிந்தாள் கண்ணம்மா.

"ரொம்ப வயசான பாட்டி, அதான் விடியகாலைல உடம்பை அடக்கம் பண்றங்களாம். அதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.