(Reading time: 6 - 11 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தொடர்கதை - இது நம்ம நாடுங்க! - 01 - ரவை

"சனே! நாம் வாழ்கிற இடமுள்ள நாட்டிலேயே இத்தனை பாலியல் கொடுமையா? ஏனிப்படி பெண்ணுடலுக்காக ஆண்கள் நாயாய், பேயாய் அலைகிறார்கள்.........?"

" தேவி! கோபத்திலே தவறாகப் பேசி, நாய்களின், பேய்களின் பழிக்கு இரையாகாதே!"

" சரி, அவைகளிடம் மன்னிப்பு கோருகிறேன், அவைகளைவிட மோசமாக இந்த ஆண்கள் ஏன் ஒழுங்கீனமாக நடக்கிறார்கள்? இந்த விஷயத்தில் நாம் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன், ஈசனே!"

"தேவி! நான் யோகத்தில் நெடுநேரமாக இருந்துவிட்டேன், அதனால் விவரமாக சொல்!"

" ஐயனே! 'பாரத பூமி, பழம் பெரும் பூமி! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடு' ன்னு எனது பக்தன் பாரதிநம்மை இந்த நாட்டுடன் இணைத்து நிறைய பாடியிருக்கிறான்.

 அப்படிப்பட்ட புண்ணிய பூமியில், இன்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அக்கிரமங்கள், தினமும் பல இடங்களில் நடந்து வருகின்றன.

 பள்ளிகளில், கல்லூரிகளில், படிக்கிற பெண்களை கடத்திக்கொண்டு போய் கற்பழித்துவிட்டு தீயில் எரித்து சாம்பலாக்குகிறார்கள்.

 வெட்கக்கேடு! மூன்று வயது சிறுமி முதல் எண்பது வயது கிழவிவரை எவரையும் விட்டுவைக்கவில்லை.

 பஸ்ஸில், காதலனுடன் பயணம் செய்த ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து சீரழித்துவிட்டு, ஓடும் ஊர்தியிலிருந்து வெளியே தள்ளி கொன்றார்கள், இளைஞர்கள்! அந்த வழக்கு பல வருஷங்களாக நடந்து எல்லா நீதிமன்றங்களும் மரணதண்டனை விதித்தும் இன்னமும் அது இழுவையில் உள்ளது.

 போதாக்குறைக்கு, இப்போதெல்லாம், ரௌடிகும்பல்கள் இளம்பெண்களை பலவந்தமாக நிர்வாணமாக்கி, அதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி அந்த அபலைகளை விபசாரத்துக்கு இரையாக்குகின்றனர்.

 இந்தக் கும்பலுக்கு உயர் அதிகாரிகளின், ஏன், அமைச்சர்களின் ஆதரவும்கூட, இருப்பதாக கேள்வி!

 இந்த வழக்குகள் பல ஆண்டுகள் நடப்பதோடு, பெரும்பாலான வழக்குகளில் சரியான ஆதாரங்கள் காட்டப்படாத காரணத்தால், குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்..........."

 " ஐயோ பாவமே! கேட்கவே நாராசமாயிருக்கே! நல்லவேளை! வேறெந்த பாவமும் செய்யாத வரையில், இதை சுலபமாக சமாளித்துவிடலாம்........"

 " ஈசனே! கலிகாலம் இல்லையா? எல்லா பாவங்களும் இப்போ நம்ம நாட்டில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.