(Reading time: 6 - 11 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

தங்குதடையின்றி நடக்கிறது, அவற்றை ஏன் முன்னிலைப்படுத்தலேன்னா, நானும் ஒரு பெண் என்பதால், இந்த பாலியல் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை, அதனால் தங்கள் கவனத்துக்கு அதை அவசரமாக கொண்டுவந்தேன்......"

 " தேவி! எந்த ஒரு குற்றத்தையும் தனிமைப்படுத்தி அகற்றுவது கடினம். ஏனெனில், இந்த குற்றத்தைப் போக்க, நிர்வாகத்தின் துணை வேண்டும், நீதிமன்றங்கள் ஒத்துழைக்கணும், தனிமனித தார்மீக நம்பிக்கையும் வளரவேண்டும். அதனால், மற்ற குற்றங்களையும் தெரிந்துகொள்ள விழைகிறேன்......."

 " காவல்துறையில், நிர்வாகத்தின் தலையீடு, நிர்வாகத்தில் அமைச்சர்களின் தலையீடு, நீதித்துறையில் நீதிபதிகள் பற்றாக்குறை, வழக்குகள் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு, கல்வித்துறையில் தலையிலிருந்து பாதம்வரை, மோசடி, ஊழல், பாலியல் வன்மை, ஆசிரியர்களின் ஒழுக்கமின்மை எல்லாம் தாண்டவமாடுகின்றன, வங்கிகளில் மக்கள் பணம் அதிகபட்ச கொள்ளையடிப்பு, மேலதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு பெரிய முதலாளி திமிங்கிலங்களுக்கு ஆயிரம் கோடிகள் கடன் கொடுத்து வசூலிக்காமல் விடுவது, விவசாயத் துறையில் நிர்வாகம் ஒத்துழைப்பு மறுப்பதோடு கெடுபிடி செய்வதனால் விவசாயிகள் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள், தனிநபர் வாழ்விலும் தர்மத்தின் இடத்தை சுயநலம் முழுவதும் ஆக்கிரமித்துவிட்டது........"

 " போதும் தேவி! போதும்! நாம் தலையிடவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நானும் கருதுகிறேன், சரி, தங்களின் யோசனையை தெரிவியுங்கள்! இந்தப் பிரச்னைகளின் மையப்புள்ளி எது என புரிந்ததா? நாம் எந்த துறையில் துவங்குவது, நமது பணிக்கு எவரின் ஆதரவும் துணையும் கோருவது?......."

 " ஈசனே! பெண்புத்தி பின்புத்தி என்பது என் விஷயத்திலும் உண்மையாகிவிட்டது, இவைகளைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. தங்களிடம் தெரிவிப்பது மட்டுமே என் சிந்தனையில் நின்றது.........."

 " பரவாயில்லை, தேவி! இவை யாவுமே மாயைதானே, உண்மை இல்லையே......இருவரும் சேர்ந்தே யோசிப்போம், முதலாவதாக, முடிவு செய்யவேண்டியதுநம்மில் ஒருவரோ, அல்லது இருவருமேயோ, பூமிக்கு நேரடியாகச் சென்று நிலமையை தெரிந்து கொள்வோமா அல்லது இங்கிருந்தே மேலோட்டமாகப் பார்ப்போமா?"

 " ஈசனே! நோய் முற்றிப் போய்விட்டதால், அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு! அதற்கு நாம் நேரடியாகச் செல்வதை தவிர, வேறு வழியில்லை....."

 " சரி, அதற்கான நேரம் வந்துவிட்டதா? இல்லை, இன்னும் சிறிது காலம் தேவையா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.