(Reading time: 9 - 18 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

விஷயம் தெரியவும் அவருடைய சொந்த பரிசோதனை சாலைக்கு சென்றான். அப்போதுதான்

அபிதா வெளுத்த உடலுடன் வாயில் இரத்தம் கக்கி இறக்கும் நிலையில் இருந்தாள். அதை ஜன்னல் பார்க்கவும் அவன் அதிர்ந்து விட்டான். என்ன இங்கே நடக்குது?

அபிதா அருகில் இருந்த ஜேக்வில் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"சார்.. நாம ஒரு ஆராய்ச்சி செய்தோம். எலிகள்ட்ட வெற்றி பெற்றது இந்த பொண்ணுட்ட தோல்வியாயிடுச்சு. அந்த பொண்ணோட உடல் இதை ஏத்துக்கலை.. நம்ம ஆராய்ச்சி தோல்வின்னு சொல்ல முடியாது. சில மருந்துகள் அலர்ஜி ஆகறதுபோல இந்த பொண்ணுட்ட அந்த வைரஸ் வலுவாயிடுச்சு. "

தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சர்மா அவன் சொன்னதை கவனித்ததுபோல தெரியவில்லை. அதற்கடுத்து அவன் சொன்னதுதான் க்ருபாவை வெறி கொள்ள வைத்தது.

"நாம இந்த ஆராய்ச்சியை சக்ஸஸ் ரிசல்ட்டா தரணும். அப்புறம் இந்த பயோடெக்  உலகம் நம்மை  நம்பர் ஒண்ணுனு  ஏத்துக்கும். இந்த ஸ்பெஸிமனை டிஸ்போஸ் பண்ணிட்டு வேற குவாலிட்டியான ஸ்பெஸிமனை வைத்து ஆராய்ச்சியை நடத்துவோம்"

அடப்பாவி… இன்னுமா புத்தி வரலை…  சட்டென கோபத்துடன் உள்ளே நுழைந்தவன்.. அந்த ஜேக் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இந்த தாக்குதலை எதிர்பாராத அவன் சுதாரித்து க்ருபாவை தாக்க ஆரம்பித்தான். சில நொடி போராட்டத்திற்கு பின் ஜேக் கீழே விழுந்தான்.

அபிதாவிற்கு நேர்ந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத க்ருபா ஜேக்கை பயங்கரமாக தாக்கி இருந்தான். அவன் பேச்சு மூச்சற்று கீழே விழவும் சர்மாவின் பக்கம் திரும்பினான். குற்ற உணர்வினால் கையறு நிலையில் இருந்த அவர் க்ருபா என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அமைதியாக கை கூப்பி அமர்ந்திருந்தார்.

"ப்ச்.. உன்னை என்ன செய்ய முடியும். மூளை மரத்து போனால் இப்படித்தான் தலைகுனிஞ்சு நிக்கனும். என்னை மாதிரி  நீயும் தோத்துதான் போயிட்டபுகழ் போதை உனக்கு…  உன் அறிவு அழிவின் உச்சியில் உன்னை நிறுத்தியிருக்கு. என்னோட திமிரும் உன்னோட அறிவும்  இந்த பிஞ்சின் அழிவிற்கு காரணம் ஆயிடுச்சு"

"உன்னோட அறிவினால அறிவியலால என் குட்டிம்மாவை பழையபடி பிழைக்க வைக்க முடியுமா?"

முடியாது என்று மறுத்து தலையசைத்த அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்…

"என் செல்லத்துக்கு ஒரு குடும்பம் இருந்துச்சுஅப்பா அம்மா தங்கச்சினு…  நான்தான் அதை அழிச்சேன். உன்னை மாதிரிதான்காக்க வந்த கடவுள்போல என்னை நினைச்சுகிட்டு எதையோ உருவாக்குவதாக நினைச்சு அழிச்சிட்டேன். " தலையில் அடித்து கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.