(Reading time: 7 - 14 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

பிடிச்சிட்டாங்களாம்… இப்பதான் பஞ்சாயத்தை கூட்டியிருக்கோம்"

"சம்பத்து எங்கே?"

"அவன் டவுன்ல இருந்து வந்துட்டு இருக்கான். மாப்பிள்ளை தம்பிதான் ஊரை கூட்ட சொல்லுச்சு"

"விஷயம் சிக்கல் போலிருக்கே"

"அதோ அவங்களே வந்துட்டாஙக"

சற்று தொலைவில் அதிரதனும் சம்பத்தும் வந்து கொண்டிருந்தனர். நடையில் ஒரு தெர்மானம் தெரிந்தது. சம்திங் சீரியஸ்அதிதி எங்கே ?

அவர் அருகில் வந்து விட்ட அதிரதன்,

"அப்பா…. இங்கே எப்போ வந்தீங்க?"

"இப்போதான் வந்தேன். என்ன விஷயம் ரதன்.. ஏதோ பிரச்சினை போலிருக்கு"

"ஒரு பிரச்சனை தீரப் போகுது டாட்.. நீங்கள் வந்தது நல்லதுதான். சில விஷயங்களை விளக்க போறோம்"

'லெட் ஸீ" அவர் ஆர்வமாக அவனுடன் சென்றார்.

பஞ்சாயத்தார் முன்னிலையில் அங்கே கட்டி வைக்கப்பட்டிருந்தவனிடம் அதிரதன் விசாரிக்க ஆரம்பித்தான்.

"யார் நீஇங்கே என்ன செய்து கொண்டு இருந்தாய்?"

அந்த சிவப்பு ஜெர்கின் அணிந்தவன் வாயை திறக்கவில்லை. அதற்குள் அங்கு வந்த செல்வா..

"மாப்பிள்ளைஇவனைத்தான் நான் சொன்னேன். இவன் பெயர் சின்னுகாட்டிலாக்காவில் வேலை பார்க்கும் மருதுவின் தம்பி" அவரே தொடர்ந்து..

"இப்ப சொல்லு.. எதுக்குடா அங்கே நின்னுட்டு இருந்தே?"

முதலில் அவன் வாயை திறக்கவில்லை. சம்பத் அவனை அடிக்க ஆரமபிக்கவும் உண்மைகளை சொல்ல ஆரம்பித்தான்.

அவனும் அஞ்சலையும் தீட்டிய கொடூர திட்டம் வெளிவர ஆரம்பித்தது. காட்டுகாளானின் விஷத்தை அதிதிக்கு அஞ்சலை தந்தது…  சின்னுவிற்கு சொல்லி தந்ததுஅதிரதன் மட்டும் அங்கு வரவில்லை எனில் அதிதியின் அவமானக்கதை  எழுதப்பட்டிருக்கும்.

அவன் சொன்னதை கேட்டு ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

"அஞ்சலை ஏன் இப்படி செஞ்சாளாம்?" என்று பெண்கள் புலம்பினர்.

தலைவர் அஞ்சலையை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

"என்னயா செல்வேந்திரன்.. உனக்கு ஏதாவது விஷயம் தெரியுமா?'

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.