(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

 "சரி, நான் வரேன்"

 " இருங்க, எங்க வேனிலே உங்களை 'டிராப்' பண்றோம்! எங்கே போகணும்?"

 இங்கர்சால் விழித்தார்!

 சரி, சார்! நேரே என் வீட்டுக்குப் போவோம், கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நீங்க எங்கே போகணும்னு சொல்றீங்களோ, அங்கே 'டிராப்' பண்றேன்!"

 இங்கர்சால் பெருமூச்சு விட்டார். யோசிக்க, சிறிது அவகாசம் கிடைத்துவிட்டது.

 போலீஸ் அதிகாரியின் வீடு வந்ததும், இருவரும் தனிமையில் பேசினர்.

 " சார்! சொல்லலாம்னா, சொல்லுங்க! உங்களுக்கு எப்படி, எந்த அளவுக்கு அமைச்சர் நெருக்கமானவர்?"

 " நாங்க ரெண்டுபேரும் ஒரே ஊர், ஒரே சாதி! அவருக்கு தேவையானதை அப்பப்ப செய்து கொடுப்பேன், அவ்வளவுதான்! ரொம்ப நெருக்கம்னு சொல்ல முடியாது.............."

 " நான் உங்ககிட்ட ஒரு பரம ரகசியத்தை சொல்றேன், அதை முடிந்தால், அமைச்சரிடம் தெரிவியுங்கள்! அந்த பரம ரகசியத்தை அவர் தேவைப்பட்டால், உபயோகிச்சிக்கலாம்......."

 " அப்படியா?"

 " நீங்க எப்படி அமைச்சரின் சொந்த ஊர், சாதியோ, அதேபோல நான் முதல் அமைச்சரோட ஊர், சாதி! எங்க குடும்பமும் அவர் குடும்பமும் தாயாதி, பங்காளி உறவு! ஆனா, அவர் முதலமைச்சரானபிறகு, எங்களை மதிக்கிறதேயில்லே!"

 " அப்படியா?"

 " அது மட்டுமல்ல, எங்களுக்கு சேரவேண்டிய பல கோடி ரூபா சொத்துக்களை அபகரிச்சிக்கிட்டாரு......."

 " அடப்பாவி!"

 " அவரு நிறைய மோசடி பண்ணியிருக்காரு, அதிலே ஒண்ணை மட்டும் சொல்றேன், ஏன்னா அது எனக்கு நேரிடையா தெரியும் என்பது மட்டுமல்ல, அதை அவராலே மறுக்க முடியாதபடி, எவிடென்ஸ் எங்கிட்ட இருக்கு, அதை சொல்றேன், நீங்க அவர் காதிலே போட்டு வைங்க! சரியான நேரத்திலே அதை உபயோகப்படுத்தி, முதலமைச்சரை கவிழ்த்துவிட்டு, அமைச்சர் அந்த பதவியை பிடிக்கலாம். இதிலே எனக்கு ஒரு ஆதாயமும் நேரடியா இல்லாவிட்டாலும், எங்களுக்கு துரோகம் செய்ததற்கு பழி வாங்கின திருப்தி கிடைக்கும்......"

 "சொல்லுங்க!"

 " அரசுக்கு சொந்தமான காலி மனையை பினாமி பேரிலே ஒதுக்கி பதிவு செய்துவிட்டு, இப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.