(Reading time: 7 - 13 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

“சார் அதுக்குன்னு எந்த கேள்வியும் கேக்காம நீங்க சொல்லுறதை  மட்டும்  எழுத சொல்றீங்களா...”

“கண்டிப்பா இல்லை... நீங்கதான் இந்த நாட்டோட மூன்றாவது கண்... உங்க வழியாகத்தான் எந்த விஷயமானாலும் சாமானிய மனிதனை போய் சேருது... அதனால கொஞ்சம் பொறுமையா, பொறுப்பா இருங்கன்னு சொல்லுறேன்... இந்த கேஸ் எடுத்துக்குங்க... இன்னும் என்ன விஷயம் அப்படின்னே தெரியாம அடுத்த நாட்டு சதி வரைக்கும் போயிட்டீங்க... அதைத்தான் பண்ணாதீங்கன்னு சொல்லுறேன்...”, மதி கூற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அமைதியானார்கள்....

“இந்த கேஸ் நாட்டையே உலுக்கி போட்டிருக்கு... ஒரு ஐந்து நிமிஷத்தில் இதை விளக்கிட்டு போக முடியாது... அதனால் அமைதியா எல்லாரும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் அமருங்க... நாங்க என்ன நடந்ததுன்னு உங்க எல்லாருக்கும் விளக்கறோம்....”, சந்திரன் கூற நிருபர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தார்கள்....  மதியும், சந்திரனும் மாற்றி மாற்றி வழக்கை பற்றி பேச ஆரம்பித்தார்கள்...

உங்க எல்லாருக்கும் XXX கல்விக் குழுமங்கள் பற்றி தெரிந்திருக்கும்...  மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரின்னு தமிழ் நாட்டில் நான்கு மாவட்டங்களிலும், பெங்களூர், கேரளாவிலும் இருக்கு... அவர்களுடைய கல்விக் குழுமத்தின் கீழ்வரும் சில கணிப்பொறி நிலையங்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது... அதனுடைய தலைவர் திரு. நரேந்திரன்...

கடந்த சில ஆண்டுகளா அவருடைய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சில தற்கொலை சம்பவங்கள் நடந்து வந்தது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அதுவும் குறிப்பா மாணவ  சேர்க்கை முடிஞ்சு சில நாட்களிலேயே அந்த மரணங்கள் நிகழ்ந்தன... முதலில் நாங்கள் அதை சாதாரண தர்கொலையாகத்தான் பார்த்தோம்... ஆனால் கடந்த வருடம் அவருடைய மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவன், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்... அது  காதல் தோல்வி அப்படின்னு கேஸ் முடிஞ்சு போச்சு... ஆனால் அந்த மாணவர்களுடைய பெற்றோர் கடைசி வரை அதை ஒத்துக்கொள்ளவே இல்லை... தங்கள் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்தே சில நாட்கள்தான் ஆகிறது... அதற்கு முன்னால்  அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டது கூட கிடையாது... அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தற்கொலை வரை சென்றிருப்பார்கள்.. என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.. ஆனால் அப்பொழுது எங்களுக்கு கிடைத்த சாட்சியங்கள் எல்லாம் அவர்கள் தற்கொலைதான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.