(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 03 - ரவை

காந்தி முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவரும் பல ஜோடிகளில், தர்மன் - பிரபா ஜோடி ஒன்று!

இருவரும் எண்பது வயதை கடந்துவிட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக அங்கே கேட்பாரற்ற அனாதைகளாக வாழ்கின்றனர்!

எல்லாம் தலைவிதி!

வேறென்ன சொல்வது!

அவர்கள் வாழ்ந்த வாழ்வென்ன! சம்பாதித்து சேர்த்துவைத்து லட்சக்கணக்கான ரூபாய் எங்கே?

நான்கு பெண்களுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார்களே, ஊரே மூக்கில் விரலை வைத்து அதிசயித்து நின்றதே, அந்த நான்கு தம்பதிகளும் பிள்ளைகுட்டிகளுடன் வசதியாக மகிழ்வுடன் வாழும்போது, இவர்களுக்கேன் இந்த நிலை?

இந்த தம்பதியர் பெற்ற ஒரே மகனுக்காக, அந்த நால்வரை விரோதித்துக் கொண்டதால்தானே!

சரி, அந்த மகனாவது இவர்களை வந்து பார்க்கலாமே.......

எப்படி வரமுடியும்? அவனைத்தான், சிறையில் தள்ளிவிட்டார்களே!

சாதாரண குற்றமா? கொலைக் குற்றம்! நாலுபேர் நடமாடிய வீதியில் நண்பகலில், ஒருவனை கண்டதுண்டமாக வெட்டி, அவன் தலையை ரத்தம் சொட்டச் சொட்ட கையில ஏந்தியவாறு, நாலு தெருக்களைக் கடந்து காவல்நிலயத்தில் சரண் அடைந்த குற்றமாயிற்றே!

கோர்ட்டிலாவது, மன்னிப்போ வருத்தமோ தெரிவித்தானா, இல்லையே, தேவைப்பட்டால் மீண்டும் கொலை செய்வேன் என்று சவால்விட்ட வழக்காயிற்றே!

அவன் ஏன் அப்படி நடந்துகொண்டான்?

அவனைப் பெற்றவர்களே சொல்கிறார்கள், கேளுங்கள்!

" ஒத்தப் பிள்ளைனு ஓவரா செல்லம் கொடுத்து அவனை கெடுத்தது நாங்கதான்!

பள்ளிக்கூடத்துக்கு அவனை அனுப்பித்தால், அவன் அங்கேதான் போகிறானான்னு கவனிக்காமல் விட்டதனால், அவன் கூடாநட்பில் சிக்கி சீரழிந்ததை தடுக்கமுடியவில்லையே!

அந்த ரௌடியோட சேராதேடான்னு திருப்பித் திருப்பி எச்சரித்தோம், கேட்டானா?

அந்த ரௌடி, இவனிடமிருந்து பணத்தை கறந்துகொண்டு, இவனை போலீஸில் சிக்கவைத்து, அடிவாங்கி அவமானப்பட வைத்தான்.

இளரத்தம்!,

அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை!

சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, நடுத்தெருவில் அந்த ரௌடியை வெட்டிச் சாய்த்துவிட்டு, சிறைக்குப் போய்விட்டான், பதினெட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

எங்க பொண்ணுங்க, மாப்பிள்ளைங்க கால்லே விழுந்து கெஞ்சினோம், அவனை காப்பாற்றச்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.