(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 04 - ரவை

ர்மன் - பிரபா ஜோடியின் நான்கு பெண்களும் அவர்கள் கணவன்களும் கொரோனா பயத்தில் வீட்டில் முடங்கியிருந்தபோது, அவர்கள் மூளை வேகமாக இயங்கியது.

மூத்த மகள் ஷகீலா - ராமன் வீட்டில் பார்ப்போம்.

" ராமன்! என் தம்பி சகாதேவன், பதினெட்டு வருஷ சிறைவாசம் முடிந்து, இன்று விடுதலை ஆகியிருப்பான்........"

" அந்தப் பொறுக்கியைப் பற்றி நமக்கென்ன பேச்சு, ஷகீ! வேற நல்லது பேசுவோம்!"

" அப்படி தள்ளிட முடியாதே, ராமன்! நாம் அவனை ஒதுக்கிவைத்தாலும், அவன் நம்மை வம்புக்கு இழுக்கலாமே........"

" அதெப்படி?"

" தெரியாதமாதிரி கேட்கறீங்களே, அவனுக்குச் சேரவேண்டிய சொத்துக்களையும், நாங்க நாலு பெண்களும் பங்கு போட்டு ஏப்பம் விட்டிருக்கோமே! அவன் சும்மா விடுவானா?"

" ஓ! ஆமாமில்லே!"

" இத பாருங்க, நீங்க பெங்களூரிலே பிறந்து வளர்ந்ததனாலே, உங்களையும், இந்த 'ஆமாம்இல்லே' தொற்றிக்கிட்டு, எங்க உயிரை வாங்குது, ஆமாமா, இல்லையா, ஏதாவது ஒண்ணு சொல்லுங்க!"

" ஆமாம்! அவன் ஒரு பயங்கர கொலைகாரன் ஆச்சே, நம்ம தலையை சீவி, அதை கையில் எடுத்துக்கொண்டு வீதிஉலா வருவானே, இப்ப என்ன செய்வது?"

" நாலு குடும்பங்களையும் பாதிக்கிற விஷயமாச்சே, தங்கைகளையும் இங்கே கூப்பிடறேன், எல்லோருமா சேர்ந்து யோசிப்போம்!"

" இப்பவே, சகலைகளுக்கு போன் போட்டு, தம்பதியா வரச் சொல்றேன்.........."

"வேண்டாம், வேண்டாம், முதல்லே, நான் என் தங்கைகளிடம் பேசி, அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறேன்........"

" அதுவும் சரிதான்...."

ஷகீலா யோசித்தபின், மற்ற மூவர்களிடமும் வீடியோ கான்பெரன்ஸிங்லே பேசினாள், தங்கைகளின் கணவன்களும்தான்!

"குட் மார்னிங் அக்கா! விமலா பேசறேன், ஏதாவது விசேஷமா, எல்லாரையும் ஒரே நேரத்திலே கூப்பிட்டிருக்கே?"

" ஆமாம் அக்கா! நிர்மலா பேசறேன், அர்ஜன்டா?"

" வத்சலா பேசறேன், நான் நேரே இப்பவே உன் வீட்டுக்கு வரேனே......"

" எப்படிடீ வருவே? 144 ஊரடங்கு சட்டம் அமுலாகியிருக்கே! அதனாலேதான், போனிலே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.