(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

எங்கே இருக்கான், அப்பா - அம்மாவை போய் பார்த்தானா, அவங்க என்ன பேசிக்கிட்டாங்கன்னு ரகசியமா தெரிந்து நமக்கு சொல்ல ஏற்பாடு பண்றியா?"

" இப்பவே ரஞ்சித்துக்கு போன் பண்றேன்!"

ரஞ்சித் முதலமைச்சரைப் பார்க்க போயிருக்கிறதா, தகவல் வந்தது!

" எப்படியும் ராத்திரி வீட்டுக்கு வரும்போது, அவரிடம் சொல்றேன், பயப்படாதேக்கா!"

" அதுசரி, கையிலே துப்பாக்கியோட ரெண்டு போலீஸ்காரன் இருபத்துநாலு மணி நேரமும் உன் வீட்டுவாசலிலே காவல் இருக்காங்க, நீ தைரியமா பேசுவே, எங்க நிலமையை யோசி!"

" ஆமாம், வத்சலா! நாங்க வேணுன்னா, எங்களுக்கு பயமாயிருக்கு, பாதுகாப்பு கொடுங்கன்னு எழுதித் தரட்டுமா?"

" சரி, கொடுங்க! ரஞ்சித்தை பாதுகாப்பு தரச் சொல்றேன்....."

வத்சலா தனக்கு வீட்டில் வேலை இருப்பதாக கூறி கிளம்பிச் சென்றாள்.

நிர்மலா, ஷகீலாவிடம் நெருங்கி அமர்ந்து காதை கடித்தாள்.

" அக்கா! நாம வத்சலாவுக்கு தெரியாம, பிரைவேட் டிடெக்டிவ் மூலமா சகாதேவனை ஃபாலோ பண்ணச் சொல்வோமா?"

" ஆமாம், அக்கா! நிர்மலா சொல்றபடி செய்வோம், என்ன, சில ஆயிரம் ரூபா செலவாகும், லட்சக்கணக்கிலே தம்பி பணத்தை சொத்தை பங்கு போட்டுக்கொண்டோமே, அதிலிருந்து செலவு செய்வோம்" என்று விமலாவும் ஆமோதித்துவிட்டு, அவளும் கிளம்பிச் சென்றாள்.

" நிர்மலா! வத்சலாவுக்கு பயமில்லே, ரஞ்சித் பார்த்துப்பான்! விமலாவுக்கும் பரவாயில்லே, அவ டிஃபென்ஸ் காலனியிலே தகுந்த பாதுகாப்போட இருக்கா, நம்ம ரெண்டுபேர் பாடுதான் திண்டாட்டம்!"

"அக்கா! நான் ஒண்ணு சொல்றேன், நமக்குள்ளே இருக்கட்டும், அவங்க ரெண்டு பேருக்கும் தெரியவேண்டாம்......."

" சரி, சொல்லு!"

" நாம, தனியார் துப்பறியவங்க மூலமா, தம்பி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி, தூது அனுப்புவோம்....."

" தூதா? என்ன தூது?"

" சகாதேவன், இப்ப நடுத்தெருவிலே, கையிலே காசில்லாம, பசியும் பட்டினியுமா கஷ்டப்படறப்போ, நாம அவனுக்கு சில ஆயிரம் ரூவாவை கொடுத்து, நம்ம பக்கம் அவனை இழுத்துப்போம், மற்ற ரெண்டுபேரிடம் அவன் என்ன வேணுமோ செய்துக்கட்டும், சரியா?"

" ராமன்! நிர்மலா ஐடியாவும் நல்லா இருக்குல்லே?"

" பெஸ்ட் ஐடியா! சாட்சிக்காரன் கால்லே விழறதைவிட, சண்டைக்காரன் கால்லே விழறது மேல்! நிர்மலா! நீயே ஏற்பாடு பண்ணு! எங்க பங்கு பணத்தை தந்துடறோம்!"

நிர்மலா கணவனுடன் வீடு திரும்பினாள்!

தொடரும்...

Episode # 03

Go to Vazhve Maayam story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.