(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

கூப்பிட்டேன்........"

"அக்கா! மறந்துட்டியா, என் ஹஸ்பண்ட் ரஞ்சித் போலீஸ் கமிஷனராச்சே, என்னை எவன் தடுப்பான்? நிர்மலா! நீ எங்க வீட்டுக்கு வந்துவிடு, நான் உன்னை கூட்டிக்கிட்டுப் போறேன்....."

" ஓ.கே. விமலா எப்படி வருவா?"

" அக்கா! உங்க வீட்டுக்கு பக்கத்திலே காய்கறி மார்க்கெட் இருக்குல்லே, அங்க நான் காய்கறி வாங்கப் போறதா சொல்லி வந்துடறேன், நாலுபேரும், உங்க வீட்டிலே இன்னிக்கி விருந்தாளி!"

" அடிப்பாவி! தாலி கட்டினவனை தவிக்கவிட்டுவிட்டு, வரக்கூடாதுடீ, அவங்களும் வரட்டும், இன்னிக்கி முழுவதும் ஜாலியா அரட்டை அடிப்போம், வாங்க!"

ராமன், ஷகீலாவின் பிளானுக்கு பச்சை கொடி காட்டினான், என்ன பிளான், தெரியுமா?

வத்சலாவின் கணவன் போலீஸ் கமிஷனர் ரஞ்சித் உதவியுடன் முதலில் தம்பி சகாதேவனின் மூவ்மெண்ட்ஸை வாட்ச் பண்ணி, அவன் எங்கே இருக்கான், அப்பா - அம்மாவை போய் பார்த்தானா, அவங்க என்ன பேசினாங்கன்னு உளவறிந்து, தெரிந்துகொண்டு, அடுத்த கூட்டத்திலே, மேற்கொண்டு விவாதிப்பதென, பிளான்!

சொன்னபடி, தங்கைகள் கணவன்களுடன் வந்து சேர்ந்தனர், வத்சலாவின் கணவன் போலீஸ் கமிஷனர் ரஞ்சித்தை தவிர!

அவருக்கிருக்கிற கெடுபிடியிலே, அவர் எப்படி வரமுடியும்?

ஷகீலாவும் ராமனும் பூர்வாங்கமாக, சகாதேவன் ரிலீஸாகிவிட்டதை நினைவுபடுத்தினர்.

" ஆமாம் அக்கா! மறந்தே போச்சே! அதனாலென்ன, அந்த ரௌடி உள்ளே இருந்தாலென்ன, வெளியே வந்தாலென்ன? அவனை மறந்து வருஷம் பதினெட்டாயிடுத்து......"

" வத்சலா! நீ தைரியமா பேசஉவேடீ, உன் புருஷன் போலீஸ் கமிஷனராச்சே, எங்க நிலமையை யோசித்தியா?"

நிர்மலாவும் விமலாவும் ஷகீலாவுக்கு தாளம் போட்டு ஆமோதித்தனர்.

" அக்கா! அவன் பயங்கர கொலைகாரன்! ஊரிலே யாரோ ஒரு பெண்ணை, எவனோ அவமானப்படுத்தினதுக்கே, அப்படி கொலை பண்ணினானே, இப்ப அவன் பணத்தை, சொத்தை, கொள்ளையடித்த நம்மை சும்மா விடுவானா?"

" நிர்மலா கரெக்டா சொல்றா, அவன் ரஞ்சித்துக்கும் பயப்படமாட்டான், அதுவும் இப்ப, பதினெட்டு வருஷ கடுங்காவல் தண்டனை அனுபவித்த ஆத்திரமும் சேர்ந்திருக்கும்........"

"வத்சலா! நீ ஒரு காரியம் செய்யணுமே!"

" சொல்லுக்கா!"

" ரஞ்சித் மூலமா, சகாதேவன் மூவ்மெண்ட்ஸை வாட்ச் பண்ணச் சொல்லணும், அவன் இப்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.