(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 07 - ரவை

மிஷனர் ரஞ்சித், அன்றிரவு வீடு போய் சேர்ந்ததும், தன் உடுப்பைக்கூட அகற்றாமல், மனைவி வத்சலாவுடன் பேசினார்.

" வத்ஸ்! நீ என்னிடம் சொல்லவே இல்லையே, உங்கப்பா, அம்மா, காந்தி முதியோர் இல்லத்திலே பத்து வருஷமா இருக்கிறதை......!"

" அப்படியா? எனக்கே தெரியாதே! உனக்கு எப்படி தெரிந்தது?"

" இன்னிக்கி அமைச்சர், அங்கே, கொரோனா பாதிப்பு விசிட்லே, போயிருந்தபோது, நானும் போயிருந்தேன்.

அந்த இல்லத்தின் காப்பாளர், எனக்கு தெரிந்தவர். அவர்தான் சொன்னார்......."

" நீங்க அவங்களை பார்த்தீங்களா? பேசினீங்களா? என்ன சொன்னாங்க? என்னைப்பற்றி விசாரிச்சாங்களா?"

" வத்ஸ்! முதல்லே, கொஞ்சம் மூச்சு விடு! அடுக்கிண்டே போகாதே, கேள்விகளை!

நல்லவேளையா, காப்பாளர், நான் அங்கே போனவுடனேயே, விஷயத்தை சொன்னதுனாலே, நான் அவங்களை பார்க்கறதை தவிர்த்துட்டேன்......"

" நல்லவேலை செஞ்சே! பார்த்திருந்தால், ஊர் வம்பு பேசியிருக்கும், கமிஷனர் மாமனார் - மாமியார் முதியோர் இல்லத்திலே கஷ்டப்படறாங்கன்னு! நல்லவேளை!"

" அதை விடு! ஒரு ருசிகரமான தகவல்! உன் தம்பியைப்பற்றி அவங்க, என்னிடம் விசாரிக்க சொன்னாங்களாம், அவன் இப்ப இருக்கிற இடத்தைப்பற்றி கூட, ஹேஷ்யமா, அவன் பதினெட்டு வருஷம் முன்பு காப்பாற்றினானே ஒரு பொண்ணை ரௌடியிடமிருந்து, அந்தப் பொண்ணு வீட்டிலே அவன் இப்ப இருக்கலாம்னு நம்பறாங்க, என்னிடம் சொல்லி, விசாரிக்கச் சொன்னாங்களாம்........."

" ஐயையோ! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்! ஏன்னா, அதிலே ஆரம்பித்து, ஒண்ணொண்ணா தொடர்ந்து எதிலே கொண்டுபோய் முடியுமோ? நம்ம வீட்டுக்கே வந்தாலும் வந்துடுவாங்க! வேண்டவே வேண்டாம்!......."

" ஏன் அப்படி பெற்றவங்களை வெறுக்கிறே?"

" அவங்க, இன்னமும் அந்த கொலைகாரனை, பிள்ளையா நினைச்சு உருகறாங்களே, அவனை மறுபடியும் குடும்பத்திலே ஒருத்தனா சேர்த்துக்கச் சொல்வாங்க, அவன் தனக்கு சொத்து வேணும்பான், தரலேன்னா, கழுத்தை வெட்டி, கையிலே எடுத்துக்கிட்டு, வீதிவலம் வருவான்......வேண்டாம்!

அவன் சகவாசமே, இல்லை அவன் மூச்சுக்காற்றே நம்ம மேலே படவேண்டாம்!"

" நீ இப்படி சொல்வேன்னு முன்கூட்டியே தெரிந்து, நானும் கை கழுவிட்டேன், பாவம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.