(Reading time: 6 - 11 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" இதென்ன புதுக்கதையா இருக்கு! சொல்லு!"

" உன்னை நம்பாமல், அவங்க, ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏற்பாடு பண்ணி, அவனை தம்பியைப்பற்றி விசாரிக்கச் சொல்லியிருக்காங்க!"

" அது எப்படி உனக்கு தெரியும்?"

" என்னை நம்பாதே, கேள்வி மேல கேள்வியா கேளு! ஆனா அந்த 'சொக்கா'க்களை முழுசா நம்பு! எக்கேடோ கெட்டுப்போ! எனக்கென்ன?

சரி, சரி, சாப்பாடு எடுத்துவை, பசிக்குது! டிரஸ்ஸெ மாத்திக்கிட்டு வரேன்........"

" சாரி, வெரி சாரி, ரஞ்சித்! உன்னை நம்பாம இருப்பேனா? சொல்லு, உனக்கெப்படி தெரியும்?"

" அந்த பிரைவேட் டிடெக்டிவ் என்கூட படிச்சவன், அவனுக்கு ஐ.பி.எஸ். கிடைக்கலே, தனியா தொழில் பண்றான், அவன் உங்க 'சொக்கா'கிட்ட காசை வாங்கிகிட்டு, எங்கிட்ட போட்டுக் குடுத்துட்டான், ஏன்னா அவனுக்கு என் தயவு வேற பல விஷயங்களிலே தேவைப்படுது!"

" ஏன் அப்படி செய்தாள், அக்கா! யாரை நம்பறதுன்னே, தெரியலியே!"

முதல் காரியமாக, இந்த விஷயம் விமலாவுக்கு தெரியுமான்னு அறிய, அவளுக்கு போன் செய்தாள்.

" விமலா! எப்படி இருக்கே?"

" என்ன வத்சு! திடீர்னு போன் பண்ணி விசாரிக்கிறே, புரியலியே!"

" இதப்பார்! என்னை 'வத்சு', 'கொத்சு'ன்னு கூப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? அடுத்த முறை அப்படி கூப்பிட்டே, நான் உன்னோட பேசறதையே நிறுத்திடுவேன்! அழகா, 'வத்சலா'ன்னு முழுப் பெயரை சொல்லிக் கூப்பிடு, புரிஞ்சுதா?"

புரிஞ்சுதா, இல்லையா என்று பதில் சொல்ல, மறுமுனையில் நபர் இல்லை, கனெக்‌ஷன் 'கட்'!

" அடிப்பாவி! விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி 'கட்' பண்ணிட்டியே! சரி போ! எனக்கா நஷ்டம்?"

ரஞ்சித் களைப்பு மிகுதியில் படுத்தவுடன், உறங்கிவிட்டான்.

ஆனால், வத்சலாவினால் தூங்க முடியவில்லை!

அக்கா அப்படி ஏன் செய்தாள்? அவளும் நிர்மலாவும் மட்டும் ரகசியமா அந்த ரௌடியைப்பற்றி, அவன் இருக்கிற இடத்தை தெரிஞ்சிகிட்டு, என்ன பண்ணப் போறாங்க, நான்தான் ரஞ்சித் மூலமா, விசாரித்து சொல்றேன்னு சொன்னேனே, என்னை நம்பலையா?

அவங்க ரெண்டு பேரும் அப்படின்னா, இந்த விமலாவும் என் உறவே வேண்டாம்னு 'கட்' பண்ணிட்டாளே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.