"கேர்ள் பிரென்ட்????" என குழப்பமான குரலில் கண்ணில் இருந்த கூலரை கழட்டி கையில் பிடித்தவன் புருவம் சுருங்க யோசித்தான். யோசித்தவன் அடுத்த நொடி கடகடவென சிரிக்க தொடங்கினான்.
"கேர்ள் பிரென்ட்....கேர்ள் பிரெண்டா....ஆமாம் ஆமாம்" அவனின் சிரிப்பை இவள் குழப்பத்துடன் நோக்க, "என்னை மாதிரி ஹாண்ட் சம், ரிச் அண்ட் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலருக்கு டெய்லி ஒரு கேர்ள் பிரென்ட் தான்" என அவன் சிரிக்க, அவனின் அந்த கேவலமான நகைச்சுவைக்கு இவளுக்கு சிரிக்க தோன்றவில்லை. மாறாக அவனுக்கு உள்ள பெண்களை பற்றிய இந்த கேவலமான சிந்தனையை எண்ணி அவளுக்கு கோவம் தான் வந்தது. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் அமைதி காத்தாள். அவளின் முகத்தை பார்த்தவன் ஒருமுறை அவளை மேலிருந்து கீழாக அளவெடுப்பதை போல பார்த்து விட்டு "நீ கூட ரொம்ப அழகா இருக்க... இப் யூ ஆர் இன்டெரெஸ்ட்டேட் , யூ கேன் பீ மை கேர்ள் பிரென்ட்...ஜஸ்ட் பார் எ டே..." என்று சொல்லிமுடிக்கும் முன் அவனின் கன்னத்தில் பதிந்தது தமிழ்செல்வியின் கைவிரல்கள்.
அவள் கொண்ட கோபம் முழுதும் ஒன்று திரட்டி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள். அவள் அடித்ததை அவன் உணரவே அவனுக்கு சில நொடிகள் பிடித்தது. அதை உணர்ந்த நொடி அவன் கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவக்க, அவன் அவளுடைய கழுத்தை பிடித்தான்.
"என்னையே அடிக்கிற அளவுக்கு உனக்கு திமிரா? நீ என்ன பெரிய உலக அழகினு நினைப்பா? என்னை அடிச்சிட்டில....யூ வில் பெ பார் இட்...ஐ வில் மேக் யூ பெ போர் இட்..." என அவள் கழுத்தை பிடித்து அழுத்தியவன் அவளை அப்படியே கீழே தள்ளிவிட்டு செல்ல அவன் கழுத்தை பிடித்ததில் தடைபட்ட சுவாசத்தை திரும்ப பெற்றவள் அவள் கீழே தள்ளிய இடத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள். எதுவும் கனவு கண்டோமா என அவளுக்கு குழப்பமாக இருந்தது. இல்லை என்றது அவளின் கையில் அவனை அடித்ததால் உண்டான எரிச்சல்.
அங்கேயே அப்படியே அமர்ந்தாள் தலையை கைகளால் தாங்கி பிடித்தபடி. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் பேசியது தவறு, அதற்க்கு அவளுக்கு கோபம் வந்ததில் தவறில்லையே... அவனின் கேள்வியினால் அவளுக்குள் உண்டான அருவருப்பை அவள் முகம் பிரதிபலித்தது. ஆனாலும் இப்போது இது தேவை இல்லாத பிரச்சனை தானே...வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பிரச்சனை இருந்தால் எப்படி வேலை செய்ய முடியும்!!! அவள் குழப்பத்துடன் அமர்ந்திருக்க, "ஹாய் தமிழ், என்ன இங்க உக்காந்திருக்க?" என்றபடி வந்தான் அசோக். இவள் இருந்த குழப்பத்தில் அவன் கார் உள்ளே வந்ததை கூட அவள்