(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அவள் அன்று அங்கிருந்து கிளம்பும் வரை அவன் கீழே வரவே இல்லை.

"தமிழ், நீ பாட்டிக்கு அசோகா ஹல்வானா ரொம்ப பிடிக்கும்னு சொன்னியே. இந்தா இதுல கொஞ்சம் வெச்சிருக்கேன். கொண்டு போயி கொடு" அன்று காவ்யாவின் பிறந்தநாள் என்பதால் கலைவாணி அவளுக்கு பள்ளிக்கு கொண்டு செல்ல செய்த அசோக ஹல்வாவில் ஒரு பகுதியை ஒரு டிபன் பாக்சில் வைத்து கொடுத்தார்.

"அம்மா, பாட்டிக்கு இவ்ளோவா? அதுவும் நெய்யும் முந்திரியும் மிதக்குது. இவ்ளோ ஃபேட் எல்லாம் கொடுக்கக்கூடாது மா. அவங்களுக்கு ஏற்கனவே கொஞ்சம் ஹார்ட் ப்ரோப்லேம் இருக்கு. கொலஸ்ட்ரால் ஜாஸ்தி ஆயிடும்" தமிழ்செல்வி மறுக்க, "அங்க அவங்க பேர பசங்க இருக்காங்கனு சொன்னியே. எல்லாருக்கும் கொடு தமிழ்" என வற்புறுத்தி கொடுத்தனுப்பினார் கலைவாணி.

"அடடா எனக்கு பிடிச்ச அசோக ஹல்வா...ரொம்ப தேங்க்ஸ் செல்வி. அம்மாக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு. அம்மா கைப்பக்குவம் ரொம்ப பிரமாதமா இருக்கு" ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்தவர் சொல்ல, "ஹ்ம்ம் சொல்றேன் பாட்டி. ஆனா அவ்ளோ தான் உங்களுக்கு. இனி மேல் எடுத்து சாப்பிட கூடாது" என அந்த பாக்ஸை எடுத்து மூடி வைத்தாள்.

"அம்மா எனக்கு தான கொடுத்து விட்டாங்க...இப்போ அதை எடுத்து வெச்சு என்ன பண்ண போற?" விசாலம் ஏக்கமாக கேட்க, "அம்மா எல்லாருக்கும் சேர்த்து தான் பாட்டி கொடுத்தாங்க..."என்றாள் தமிழ்செல்வி புன்னகையுடன்.

அதற்குள் பரத் வர, அவனும் அதில் இருந்து ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் போட்டவன் சுவையாக இருக்கவும் இன்னொரு ஸ்பூனையும் விழுங்கினான். 

"அசோக் வந்தாருன்னா அவருக்கு கொடுக்கணும். அவருக்கு மட்டும் ஒரு கப்ல எடுத்து வெச்சிடறேன்" என்றவள் ஒரு கப்பை எடுக்க உள்ளே சென்றாள்.

அதற்குள் கீழே வந்த ராம், பரத் எதையோ ரசித்து சுவைத்து சாப்பிடுவதை கண்டவன் "டேய் தடிமாடு எப்பப்பாரு என்னடா சாப்டுட்டே இருக்க?" என அவன் கையில் இருந்த பாக்ஸை பிடுங்கியவன் "வாவ் ஹல்வா....இட்ஸ் மை பாவோரைட்...பாவி இப்படி தனியா திங்கற" என்றபடி அதை எடுத்து ஒரு விள்ளல் வாயில் இட "தமிழ்செல்வி கொண்டு வந்தாங்க...அவங்க சிஸ்டர்க்கு பர்த்டேனு...சரி எனக்கு காலேஜ்க்கு லேட்டாச்சு பை" என்ற பரத் அங்கிருந்து நகர, அதற்குள் கிச்சனில் இருந்து வெளியே வந்த தமிழை கண்ட ராம் அடுத்த நொடி வாயில் இருந்ததை அங்கிருந்த வாஷ்பேஸினில் துப்பினான்.

 "சே... யார் என்ன கொடுத்தாலும் சாப்ட்டுடறான் இந்த பரத்? லோ கிளாஸ் புட்" என்றபடி பரத்தை திட்டுவதை போல தமிழை அவமதிக்க முயல, "ராம்" என்ற விசாலத்தின் குரலில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.