(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அமைதியானான்.

"என்ன ராம் இப்படி பேசற??? இப்படியா நான் உன்னை வளர்த்தேன். எப்போ இருந்து நீ லோ கிளாஸ் ஹை கிளாஸ் எல்லாம் பாக்க ஆரம்பிச்ச? லோ கிளாஸ்சும் ஹை கிளாஸ்சும் பணத்தையும் வசதியையும் வெச்சு சொல்ல கூடாது. அது குணத்தை பொறுத்தது. இது தான் நான் உன்னை வளர்த்த லட்சணமா?" விசாலம் ராமின் முன்னால் நின்று அவனிடம் கேள்வி கேட்க அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, அவர்கள் பேசுவதை எல்லாம் அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த தமிழ்செல்வியிடம் வந்த விசாலம் "அவனுக்காக நான் மன்னிப்பு கேக்கறேன் செல்வி" எனவும் "ஐயோ பாட்டி நான் இதெல்லாம் பெருசா எடுத்துக்கல... இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம்" என்றாள் தமிழ்செல்வி.

திரும்பி ராமை பார்த்த விசாலம் அவனருகே வந்தவர் "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்று அவனின் முகம் பார்த்து சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் நுழைய, அவன் தான் வருந்தவேண்டும் என்று வேண்டும் என்றே இப்படி பேசி இருக்கிறான் என்பதை உணர்ந்திருந்த தமிழ்செல்வி அந்த பாக்ஸை மூடி எடுத்து தன்னுடைய பேகில் வைத்தவள் அங்கிருந்து நகர முற்பட "என்ன என்னை பாட்டிகிட்ட திட்டு வாங்க வெச்சுட்டா நீ ஜெயிச்சுட்டேன்னு நெனைக்கிறியா?" என அவளின் முன்னால் வழியை மறித்து நின்றபடி ராம் கேட்க, "போட்டியே இல்லாதப்போ வெற்றியும் தோல்வியும் எங்க இருந்து சார் வந்துச்சு. நீங்க சொன்ன மாதிரி நான் லோ கிளாஸ். நீங்க ஹை கிளாஸ். என்கிட்டே போட்டி போடறது மட்டும் எந்த வகைல உங்க ஸ்டேட்டஸ்க்கு ஒத்து வரும். நீங்க அன்னைக்கு பேசுனது தப்பு. அதனால எனக்கு கோவம் வந்துச்சு. என்னையும் அறியாம நான் உங்களை அடிச்சுட்டேன். அதை மனசுல வெச்சுகிட்டு நீங்க இப்படி டென்சன் ஆயி என்னை மாதிரி ஒரு சாதாரண பொண்ணுகிட்ட போட்டி போடறதும் பழி வாங்க நினைக்கிறதும் சின்னப்பசங்க விளையாட்டு மாதிரி இருக்கு. இதோட விட்ருங்க சார்" தமிழ்செல்வி சொல்ல, அவன் முகம் இன்னும் ரௌத்திரம் ஆனது. "ஏய்ய்ய்… எனக்கே நீ அட்வைஸ் பண்றியா" அவன் ஒற்றை விரலை உயர்த்தி அவளை மிரட்ட அவள் பதில் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் போவதையே கண்டவன் அவளை அழவைக்காமல் ஓயமாட்டேன் என மனதிற்குள் சூளுரைத்து கொண்டான். அவளே அவன் முன்னால் வந்து நிற்பாள் என ராம்க்கு ஆதரவாக காலம் சதி செய்தது.

"அம்மா நீங்க வேணா அவளால நடந்ததை எல்லாம் மறந்துருக்கலாம். என்னால மறக்க முடியாது. என்னால அவ முன்னாடி நின்னு பெர்மிஷன் தானு கேக்க முடியாது. அப்படி அவ கிட்ட கேட்டு தான் ட்ரிப் போகணும்னு எனக்கு அவசியம் இல்ல" தமிழ்செல்வி வீட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.