(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கவனித்திருக்கவில்லை. அவளருகே வந்தவன் அவள் முகத்தை பார்த்ததும் அமைதியானான்.

"என்னாச்சு தமிழ்? உடம்பு எதுவும் சரி இல்லையா?" என்றபடி அவளருகே அமர்ந்து அவளுடைய நெற்றியில் கைவைத்து பார்த்தான் அசோக். இந்த ஒரு மாத காலத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி இருந்தது.

"இல்லை இல்லை லேசான தலைவலி தான்" என்றபடி தமிழ்செல்வி எழ, அசோக்கும் எழுந்து அவளுடன் இணைந்து நடந்தான். மேலே அவனுடைய அறைக்கு வந்ததும் அங்கிருந்த ஜன்னல் வழியே கீழே பார்த்த ராமின் கண்களில் விழுந்தது இந்த காட்சி. அவனை அடித்தவள் இப்போது மட்டும் அசோக் தொடும்போது அவனிடம் அமைதியாக பேசுவதை கண்டவனின் முகம் இன்னும் கோவத்தில் கொந்தளித்தது.

அவர்கள் இருவரும் உள்ளே வரவும் ராம் மேலே இருந்து கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது. அவன் கண்களில் அவளை காணும் போது இருந்த வெப்பத்தை உணர்ந்த தமிழ்செல்வி, "நான் பாட்டி எழுந்துட்டாங்களானு பார்த்துட்டு வரேன்" என அருகே இருந்த அசோக்கிடம் முனகி விட்டு பாட்டியின் அறையை நோக்கி செல்ல, "வாடா டாக்டர் எப்படி இருக்க" என்றபடி அசோக்கின் அருகே வந்த ராம் அவனின் தோளில் கைபோட்ட படி அவனையும் அழைத்து கொண்டு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

"அப்பறம்....பாட்டிக்கு மட்டும் தான் டாக்டர் வேலை பாக்கறேன்னு பார்த்தா அவங்க கேர் டெக்கர்க்கு கூட பாப்ப போல? " ராமின் குரலில் இருந்த பரிகாசம் புரியவில்லை அசோக்கிற்கு. அவனின் கேள்வியை எதார்த்தமாக எண்ணிய அசோக், "ஒ...தமிழை சொல்றியா? கீழ தலைவலின்னு உக்காந்திருந்தா...அதான் என்னனு பார்த்தேன்" என்றான் அசோக் ராமிடம்.

"ஹ்ம்ம்...தமிழ்!!! பேரை சுருக்கி கூப்டற அளவுக்கு நெருக்கமா? இன்டெரெஸ்டிங்" அசோக் தமிழ்செல்வியை தமிழ் என அழைப்பதை கண்ட ராம் முகத்தில் கோவம் இருந்தது. அவனின் கேள்வியில் கள்ளத்தனம் இருந்தது. ஆனால் மனதில் கள்ளம் இல்லாத அசோக் அதை கவனிக்கவில்லை. அதை அசோக் உணரும் முன்னே முகத்தை மாற்றிய ராம் அவனிடம் வேறு ஏதோ பேசியபடி அமர்ந்திருக்க, விசாலம் வெளியே வந்தார்.

"என்னடா ராம் இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?" என்றவாறே அவர்களின் அருகே வந்து அமர்ந்தார்.

"இல்லை பாட்டி இன்னைக்கு இங்க பக்கத்துல இருக்கற ஒரு ஹோட்டல்ல தான் கிளைன்ட் கூட மீட்டிங். அதான் முடிச்சதும் நேரா வீட்டுக்கு வந்துட்டேன். மீதி ஒர்க்கை  வீட்ல இருந்தே பார்த்துக்கலாம்னு. நாளைக்கும் மதியம் கிளைண்ட்ஸ் கூட லன்ச் அதே ஹோட்டல்ல தான். சோ மதியமா தான் நாளைக்கு ஆபீஸ் போகணும். காலைல வீட்லயே இருந்து ஒர்க் பாக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.