போறேன்" என்றான் ராம்.
"பாக்கியம்" என உள்ளே நோக்கி குரல் கொடுத்த விசாலம் அவர் வந்ததும் எல்லோருக்கும் காபியும் ஸ்னாக்ஸ்சும் கொண்டுவர சொன்னார்.
"இந்த பொண்ணு எங்க? " என்றவர் "செல்வி..." என அழைக்க, அவரின் அறையில் அதையும் இதையும் செய்து கொண்டு ராம் அந்த இடத்தை விட்டு செல்ல காத்து கொண்டிருந்த தமிழ்செல்வி, பாட்டியின் குரலில் வேறு வழியில்லாமல் வெளியே வந்தாள்.
"வா செல்வி...என்னாச்சு உனக்கு? அங்க என்ன பண்ணிட்டு இருந்த? இங்க வந்து உக்காரு" என விசாலம் அழைக்க சற்றே தயங்கியபடி அவரின் அருகே வந்து அமர்ந்தாள் தமிழ்செல்வி.
"டேய் அசோக், உனக்கொண்ணு தெரியுமா? நேத்து செல்வி ஒன்னு பண்ணுனா...அத பார்த்தா நீயே ஆச்சர்யப்படுவ" என விசாலம் அசோக்கிடம் சொல்ல, "என்ன பாட்டி???" என்றான் அசோக் ஆவலாக.
"செல்வி போயி அந்த நோட்டு புத்தகத்தை எடுத்துட்டு வா" என்று விசாலம் சொல்லவும் "இல்ல பாட்டி இப்போ வேணாம்" என்றாள் தமிழ்செல்வி ராம் இருப்பதை உணர்ந்து.
"சொன்னா கேளு போ போயி எடுத்துட்டு வா" என விசாலம் சொல்ல, உள்ளே செல்பவளையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராம். அவன் கை அவனையும் அறியாமல் அவன் கன்னத்தை தடவியது.
அவள் ஒரு நோட்டு புத்தகத்தை கொண்டு வர அதை பிரித்தவர் அதை அசோக்கிடம் காட்டினார். அதில் பாட்டியை அப்படியே பிரதி எடுத்தது போல வரைந்திருந்தாள் தமிழ்செல்வி.
அதை பார்த்த அசோக், "வாவ் தமிழ், யூ ஆர் வெரி டேலண்ட்ட் . அப்படியே போட்டோ எடுத்த மாதிரி இருக்கு...இங்க பாரு ராம். அப்படியே பாட்டிய வரைஞ்சிருக்கா... ஜஸ்ட் பென்சில் வெச்சு இவ்ளோ அழகா..."என அவளின் ஓவியத்தை புகழ்ந்த படி அதை ராமிடம் காட்டினான் அசோக்.
ராமின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அதை வெளியே மற்றவருக்கு காட்டாமல் "யா குட்" என்று சொல்ல, அவனின் கோபம் மற்றவருக்கு தெரியாமல் போனாலும் தமிழ்செல்விக்கு புரிந்தது.
"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் மேல போறேன். அப்பறம் பாக்கலாம் அசோக்" என்றவன் அங்கிருந்து எழ, "டேய் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு போ" என விசாலம் அழைக்க, 'மேல அனுப்பிடுங்க பாட்டி" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் அங்கிருந்து போனதும் தான் தமிழ்செல்விக்கு மூச்சே இயல்பாக வந்தது. இப்படியே தினமும் எப்படி சமாளிப்பது என்ற யோசனை உண்டானது அவளுக்கு. ஆனால் அதற்க்கு பின்