Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசு - 5.0 out of 5 based on 2 votes
Kannukkul neeyadi
Pin It

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசு

மோகனப்பிரியா தன்னுடைய தாய் சாந்தி அவளின் சகோதரிக்கு செய்த துரோகத்தால் தன்னுடைய வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு அவளுடைய பெரியம்மா வசந்தியை நினைத்து இப்போதும் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

"ய் எருமை. இன்னும் எழுந்துக்காம என்னடி பண்றே?"

தாய் காமாட்சியின் குரலை சட்டை செய்யாமல் படுக்கையில் புரண்டாள் சாந்தி. அவள் கண்ட இனிய கனவை விட்டு எழ மனமில்லாமல் படுத்திருந்தாள்.

"அம்மா. அவளை ஏன் தொந்தரவு பண்றே?"

தங்கைக்கு சாதகமாகப் பரிந்து வந்தாள் வசந்தி.

"எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான் வசந்தி. ஏழு கழுதை வயசாகுது. இன்னும் பொறுப்பு வரலை." என்று நொந்துகொண்டாள் காமாட்சி.

"அம்மா. இதெல்லாம் அநியாயம். முதல்ல என்னை எருமைன்னு சொன்னே. இப்பக் கழுதைன்னு சொல்றே. என்னுடைய பேரை சொல்லிக் கூப்பிடறது உனக்கு அத்தனை கஷ்டமாவா இருக்கு? ஆமா நீ சொல்லு. ஏழு கழுதை வயசாகுதுன்னு சொன்னியே. அப்படின்னா எத்தனை வயசும்மா?" என்று தலைசாய்த்துக் குறும்புடன் கேட்ட தங்கையை ரசித்துப் பார்த்தாள் வசந்தி.

ஆனால் காமாட்சியோ கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

"முதல்ல படுக்கையில் இருந்து எழுந்திரு."

"ப்ச்." தாயின் கடுமையில் வேறு வழியில்லாமல் படுக்கையில் எழுந்தமர்ந்தாள்.

"நீ நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறே. உனக்கு ஒத்தாசையா இருக்கலாம்ல." வருத்தம் தோய்ந்த குரலில் தன் மூத்த மகளிடம் கூறினாள் காமாட்சி.

"இருக்கட்டும்மா. வேறென்ன சுகத்தை அவ இங்கே அனுபவிச்சுட்டா?"

"எத்தனை நாட்களுக்கு வசந்தி? நீ என்ன சுகத்தை அனுபவிச்சுக்கிட்டா இருக்கே? நீ மட்டும் இந்தக் குடும்பத்தைத் தாங்கலைன்னா நம்ம நிலைமை என்னவாகியிருக்கும்?"

"அதெல்லாம் இப்ப எதுக்கும்மா? நான் இப்ப என்னக் குறைஞ்சு போயிட்டேன்?"

"நீ எளிசா சொல்லிட்டே வசந்தி. ஒவ்வொரு நாளும் உன்னை நினைச்சு எனக்கு எத்தனை கவலையா இருக்கு தெரியுமா? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க முடியலையேன்னு ஒவ்வொரு கணமும் நான் வயித்தில் நெருப்பை வச்சிக்கிட்டிருக்கேன்."

"அம்மா. தேவையில்லாமல் எதுக்கும்மா கவலைப்படறே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னா பணங்காசு வேணும்னு கேட்கிறவங்க வீட்டில் போயா நான் சந்தோசமா வாழ்ந்துடப் போறேன்? பார்க்கலாம்மா. என் தலையில் என்ன எழுதியிருக்கோ அது படிதானே நடக்கும்."

"நீ ஏன் இப்படி விரக்தியா பேசறே வசந்தி?"

 

About the Author

RaSu

RaSu's Popular stories in Chillzee KiMo

  • Nee thaan en santhoshamNee thaan en santhosham
  • Ennai edho seithuvittaaiEnnai edho seithuvittaai
  • Mounam etharkuMounam etharku
  • Nee illaatha vazhvu verumaiyadiNee illaatha vazhvu verumaiyadi
  • Rani MaharaniRani Maharani
  • Sinthai mayanguthadi unnaleSinthai mayanguthadi unnale
  • Tholainthu ponathu en ithayamadiTholainthu ponathu en ithayamadi
  • Yaaraval yaar avalo?Yaaraval yaar avalo?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுSaaru 2020-07-01 07:26
Lovely and sad epii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுmadhumathi9 2020-06-30 06:04
:sad: sila peridam zhagu aabaththaaga mudigirathu.nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-) :thnkx: for 13 pages :clap:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுVinoudayan 2020-06-29 22:02
Nice epi sis👏 So sad of Santhi but again how did this for daughter facepalm Vasanthi really a good person (y) Eagerly waiting for next epi sis👍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுYazhini krish 2020-06-29 21:35
Nice episode mam... Santhi oda life la ipdi oru sogama athuku Santhi eh kaaranam so sad.... Eagerly waiting for next episode mam....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுSadhi 2020-06-29 20:22
Sad epi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுAdharvJo 2020-06-29 20:02
Shanthi thanoda suyanalanukaga ellordiya shanthi-i kuzhi thondi podhachitangale facepalm She has been an innocent fool....Avangalai blame panuradhai vida guess her beloved ones to be blamed pamper pana vendiyadhu than but ullaga arive illamal valarnthal ippadi than...shanthi pole thangal seyum seyalukku pinadi vara kudiya prichanaigal pattriya arivu illamal irupanga :yes: Sad to read the FB.

Priya has taken a wise call (y) Wish at least now priya can join with vasantha. Interesting update ma'am :clap: :clap: ini ena agumnu therinjika waiting.

thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 15 - ராசுதீபக் 2020-06-29 17:37
Nice episode sis :now: . Really past life of shanthi and priya is not good seems . Struggled so lot in their life. Eagerly waiting to see what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top