(Reading time: 7 - 14 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

" ஏய்! அளந்து பேசு! போலீஸ் கமிஷனருக்கு போன் பண்ணி, இங்கே வரவழைச்சிடுவேன்.......!"

" போலீஸ் கமிஷனரை உங்களுக்கு நல்லா தெரியுமாம்மா? முன்னேபின்னே அவரை பார்த்திருக்கீங்களாம்மா? அவரு பெயர் என்னம்மா?"

" நீங்க வம்பு பண்றதுக்குன்னே வந்திருக்கீங்க, வேற வழியில்லே, கமிஷனருக்கு இப்பவே போன் பண்றேன்...."

இரும்மா! அவர் நம்பரை நானே போட்டுத்தரேன், பேசும்மா! நான் இங்கேயே இருக்கேம்மா!"

கண்ணகி என்ன செய்வதென தெரியாமல் விழித்தாள்!

" ஏம்மா, விழிக்கிறே? பேசும்மா!"

" எனக்கு அவரிடம் எப்போ, என்ன பேசணும்னு தெரியும்! நீங்க கிளம்புங்க!" என்று கடுப்புடன் பேசிவிட்டு, கதவை மூட முயன்றாள்!

அந்த நபர், படியேறி வந்து, சிரித்துக்கொண்டே,

" நான்தாம்மா, கமிஷனர் ரஞ்சித்! உங்களிடம் கொஞ்சம் பேசணும்!" என்றதும், கண்ணகி வெலவெலத்துப் போய், அவரை நாற்காலியில் அமர்த்தி, " குடிக்க தண்ணீர் கொண்டுவரேன்" என்றாள்.

" வேண்டாம், வேண்டாம்! ஒரு சின்ன தகவல் நீங்க சொன்னால் போதும், நான் போயிடறேன், சகாதேவனை நீங்க அவன் விடுதலையான அன்று, சந்தித்து இங்கே உங்களுடன் அழைத்தது வந்தது தெரியும், இங்கே இருப்பான்னு நினைச்சு வந்தேன், எப்போ போனான், எங்கே போனான்னு தெரியுமாம்மா?"

" இன்று காலையிலேதான் போனாரு! கால்போன போக்கிலே போறேன்னு சொன்னாரு....."

" யாரையாவது பார்க்கப் போறதா சொன்னாராம்மா?"

" இல்லையே....."

" சரிம்மா! வரேம்மா! கதவை தாள் போட்டுக்கம்மா! யார் வந்தாலும் திறக்காதேம்மா, நான்தான் போலீஸ் கமிஷனர் ரஞ்சித்னு பொய் சொல்லி உள்ளே நுழைவாங்க, என்னை மாதிரி!"

" அடப்பாவி! அப்ப நீ கமிஷனர் இல்லையா?"

" நான் பிரைவேட் டிடெக்டிவ் விசுவநாதன்! வரேம்மா!"

சிரித்துக்கொண்டே வெளியேறிய டிடெக்டிவ், அடுத்து எங்கே போவது? என்று யோசித்தான்!

கொரோனா ஊரடங்கு உத்தரவினால், ஊரே வெறித்துக் கிடந்தது, மௌனமாக!

யாரிடமாவது விசாரிக்கலாம் என்பதற்கு, , காக்கா கூட வெளியில் தெரியவில்லை!

டூவீலரை மெதுவாக ஓட்டிக்கொண்டே தெருமுனைக்கு வந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.