(Reading time: 7 - 14 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

இருந்தாகணுமே......"

" பரவாயில்லே! நாளைக்கு வரீங்களா?"

" சான்ஸே இல்லே, குறைந்தது ஒருவாரம்! அதிக பட்சம் மூன்று வாரங்கள்! நான் இங்கே இருந்தே ஆகணுமே......."

"சரி, உங்க வருங்கால திட்டம் என்ன? என்ன செய்யப் போறீங்க?"

" மன்னிக்கணும்! நான் எப்பவும் நிகழ்காலத்திலே வாழறவன்! நீங்க நினைக்கறாமாதிரி, திட்டமெல்லாம் எதுவுமில்லே! சித்தம் போக்கு, சிவம் போக்கு!"

சகாதேவனின் சிரிப்பு விசுவநாதனுக்கு எரிச்சல் ஊட்டியது!

" உங்களை பெற்றவங்களை பார்க்கிற ஆசை இல்லையா? கூடப் பிறந்தவங்களை பார்க்க வேண்டாமா?"

"நான் என்னிக்கி, யாரை, எங்கே பார்க்கணுங்கறதை அந்த மகா சக்திதான் தீர்மானிக்குது!"

மறுபடியும் சகாதேவன் சிரிக்கவே, விசுவநாதன் பேச்சை திசை திருப்பினார்.

" சரி, இங்க என்ன வேலை உங்களுக்கு?"

"இந்த வீட்டு சின்ன குழந்தைக்கு, கொரோனா சுரமாங்கறதை தெரிஞ்சிக்க, அதை பெற்றவங்க, ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க; அங்கே, சாதாரண சுரமா, கொரோனாவான்னு டெஸ்ட் பண்ணி தெரிஞ்சபிறகுதான், அவங்களாலே வீடு திரும்ப முடியும்.

குழந்தையின் சகோதரனும் தாத்தாவும் வீட்டுக்குள்ளே, தங்களை தனிமைப் படுத்திக்கொண்டிருக்காங்க!

அவங்களுக்கு வேளாவேளைக்கு நான்தான் பக்கத்திலே இருக்கிற ஓட்டல்லே இருந்து சாப்பாடு வாங்கித் தந்தாகணும்,

அதனாலே, குறைந்தது ஒரு வாரம், அதிகபட்சம் மூணுவாரம் நான் இங்கேதான் இருந்தாகணும்......."

" இவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"

" உங்களுக்கும் எனக்கும் உள்ள அதே சம்பந்தம்தான்! சகோதரத்வம்!"

" ஓ.கே., உங்களுக்குப் பதிலா, நான் வேற ஒரு ஆளை சம்பளத்துக்கு ஏற்பாடு பண்றேன், நீங்க என்னோட கிளம்பறீங்களா?"

" இந்த வேலை எனக்கு அவங்க, ஒரு நம்பிக்கையிலே ஒப்படைச்சிருக்காங்க! அவங்களுக்கு என்னவோ என்மேலே நம்பிக்கை ஏற்பட்டிருக்கு, ஆனா, நீங்க சம்பளத்துக்கு வைக்கிற ஆளை அவங்க நம்புவாங்களான்னு நான் எப்படி சொல்லமுடியும்?"

" சரி, அவங்க எந்த ஆஸ்பத்திரியிலே இருப்பாங்க? என்ன பெயர்? நான் அங்கே போய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.