அங்கிருந்த டீக்கடையில், டீ வாங்கி குடித்துக்கொண்டே விசாரித்தார்.
"ஏங்க! சற்று முன்பு, யாராவது, தனி ஆள், உங்க கடைக்கு வந்து, ஏதாவது வாங்கினாரா?"
" வந்து பன்னும் ரொட்டியும் வாங்கி பசியிலே வாடற தெருநாய்களுக்கு கொடுத்து அதுங்க சாப்பிடறது பார்த்து, சந்தோஷப்பட்டாருங்க..."
" வேற ஏதாவது உங்களை கேட்டாரா?"
" இல்லீங்களே!"
டிடெக்டிவ் தொடர்ந்து மெதுவாக டூவீலரை ஓட்டிக்கொண்டே வந்தார்.
ஒருவரும் கண்ணில் படவில்லை!
இந்த ஆள் எங்க போய் தொலைஞ்சிருப்பான்? இந்த கொரோனா பயத்திலே ஒருத்தர்கூட வெளியிலே காணோம், விசாரிக்க!
பசி எடுத்தது, ஓட்டலை தேடிச் சென்றார்.
ஆங்! இதோ இருக்கே!
ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், கூர்க்காவிடம் விசாரித்தார்!
" ஒருத்தர் வந்து பிச்சைக்காரனுக்கு சாப்பாடு வாங்கித் தந்துவிட்டு எனக்கும் பக்ஷீஸ் தந்தாருங்க!"
" அவரு எங்கே போனாரு, தெரியுமா?"
" தெரியாதே!"
டிடெக்டிவ் விசுவநாதன் தலையை சொறிந்துகொண்டே சுற்றுவட்டாரத்தில் தேடினார்.
ஆங்! இதோ ஒருத்தன் கைப்பையுடன் வீட்டு வாசற்படியில் படுத்திருக்கிறான். அவனாக இருக்கலாம்!
அவனருகே சென்று "சகாதேவா!" என்று கூப்பிட்டதும், அவன் தலையை திருப்பி பார்த்தான்.
டிடெக்டிவ் விசுவநாதனுக்கு படு குழி!
ஆங்! கண்டுபிடித்தாகிவிட்டது! சுளையாக ஐம்பதாயிரம் ரூபாய் கறந்துவிடலாம்.
" சகாதேவன்! என்னை உங்களுக்கு தெரியாது, எனக்கும் உங்களுடன் பரிச்சயம் கிடையாது.
உங்களைப்பற்றி விசாரித்து, நீங்க எங்கிருந்தாலும் உங்களை அழைத்துவரச் சொல்லி, உங்க சகோதரிகள் ஷகீலாவும் நிர்மலாவும் என்னை அனுப்பியிருக்காங்க! நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ்! என் பெயர் விசுவநாதன்!
என்கூட வரீங்களா?"
" மன்னிக்கணும், நான் இப்ப ஒரு முக்கியமான வேலையா இங்கே அவசியமா