(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 14 - ரவை

பிரசங்கம் கேட்டு முடிந்தபிறகு, தர்மன் - பிரபா தம்பதி, தன் பெண்களுடன் அறைக்கு திரும்பியதும், மூத்த மகள் ஷகீலா உத்தரவு போட்டாள்:

" அப்பா! அம்மா! கிடுகிடுன்னு மூட்டையை கட்டி எடுத்துண்டு கிளம்ப ரெடியாயிடுங்க,வீட்டிலே ஏகப்பட்ட வேலை இருக்கு! என் பிள்ளை வேற என்னை நாள் முழுவதும் மிஸ் பண்ணி தவிச்சுப் போயிருப்பான்....."

" பிள்ளை மட்டும்தானா, புருஷனுமா?" என நிர்மலா குரல் கொடுத்ததும், கலகல சிரிப்பு!

" ஆமாம்டீ, நேத்துதான் கல்யாணம் ஆச்சு பாரு, புருஷன் பெண்சாதியை தேடறதுக்கு! இந்த வருஷம் என் மூத்த பெண்ணுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்க்கிறேன், கடவுள் புண்ணியத்திலே, நடந்து முடிஞ்சிட்டா, அடுத்த வருஷமே, நான் பாட்டி ஆயிடமாட்டேனா.......?"

" நானும் கொள்ளுப் பாட்டி ஆயிடுவேன்..." என பிரபா ஆமோதித்ததும், மறுபடியும் கலகல!

" சரி, தங்கைகளா! யார் இப்ப அப்பா - அம்மாவை அழைச்சிண்டு போகப்போறீங்க?"

" நல்லா இருக்கே, கதை! நாலுபேர் முன்னாடி பெருமையா சொல்லி கைதட்டல் வாங்கினது, யாரோ, அவாதான் அழைச்சிண்டு போகணும், இல்லையா, விமல்?"

" இதிலென்ன சந்தேகம்? நாலுபேர் நாம், முதல் டர்ன், அக்காவினுடையது, அடுத்த மூணு மாசம் நிர்மலா! உன்னோடது, அதுக்கு அடுத்த மூணு மாசம் என்னோடது, கடைசி மூணு மாசம் வத்சலாவினுடையது, ஓகேயா, வத்சலா?"

" இதப் பாருங்க! ரஞ்சித்தை கேட்காம நான் எதுவும் கமிட் பண்ணிக்கமுடியாது!

ரெண்டாவது, நாம இங்கே வந்தது, இன்னிக்கி ஒருநாள், ஜாலியா அப்பா, அம்மாவோட இருக்கறதுக்குத்தான்! அவங்களை நிரந்தரமா நம்மோட வைச்சுக்கிறதுக்கில்லே!"

" நிர்மலா! வத்சலா சொல்றதும், கரெக்ட்தான். அக்காதான், அவங்களை அழைச்சிண்டு போறேன்னு யோசிக்காம கமிட் பண்ணிண்டாங்க, அக்காதான் அவங்களை நிரந்தரமா வைச்சுக்கணும், இல்லையா நிர்மலா?"

" அது சரி, ஆனா நம்ம பங்குக்கு அக்காவுக்கு மாசாமாசம் ஏதாவது பணம் தந்துடலாம், செலவுக்கு! அதுதானே நியாயம்!"

" நியாயம், அநியாயம் இதெல்லாம் அவங்க அவங்க பார்க்கிற கோணத்தை பொறுத்தது!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெவ்வேறு வருமானம், கூடுதலா குறைச்சலா இருக்கும்,

தவிர, செலவுகளும் வித்தியாசப்படும், அதனாலே, நாம மூணுபேர் அக்காவுக்கு மாசாமாசம் தருகிற தொகையும் வித்தியாசப்படும்!

சரிதானே, வத்சலா?"

" உங்க கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்கிலே என்னை சேர்க்காதீங்க, என்னாலே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.