(Reading time: 6 - 12 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

எதுவும் தரமுடியாது........."

" பணமா தரமுடியாட்டா, அப்பா - அம்மாவை நீ அழைச்சிகிட்டு போ! எவ்வளவு செலவானாலும், நாங்க மூணுபேரும் தந்துடறோம்..... சரிதானே, அக்கா?"

"நீங்களே உங்களுக்குள்ளே திருப்பி திருப்பி மாற்றி மாற்றி பேசிக்கிட்டு, என்னை மாட்டிவிடாதீங்க!

எனக்கு என் மூத்த மகள் கல்யாணச் செலவையே எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலே.....உங்க எல்லார் சார்பிலேயுமாதான், கூட்டத்திலே வாக்கு கொடுத்தேன், உங்க மானத்தையும் காப்பாற்றினேன், தங்கைகளா! கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்குங்கடீ!"

" அதென்ன புதுசா, இத்தனை நாளா இல்லாத ஒண்ணை ஞாபகப்படுத்தறே? ஏதோ சொன்னியே, மனசாட்சி, அது இருந்திருந்தா எல்லா சொத்தையும் பங்கு போட்டுக்கிட்டு, அப்பா - அம்மாவை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவிலே நிக்கவைச்சு, முதியோர் இல்லத்திலே வாடவைச்சிருப்போமா?"

அந்த அறையே திடீரென மயான அமைதியில் மூழ்கியது!

இப்படி எடுத்தெறிந்து துடுக்காக வத்சலா பேசுவாள் என மூன்று சகோதரிகளும் எதிர்பார்க்கவே இல்லை!

ஐந்து நிமிஷம் கழித்து, "ஓ! மணி எக்கச்சக்கமா ஆயிடுத்தே, நான் வரேன், போனிலே பேசலாம்......." என யாரையும் தலை நிமிர்ந்து பார்க்காமல், தலை குனிந்து சொல்லிவிட்டு, பெற்றோரிடம் விடை பெற்றுக்கொள்ளாமலேயே, வத்சலா நழுவினாள்.

" அக்கா! அவ அப்படித்தான்! என்னிக்கு அவ நம்மோட ஒத்துப் போயிருக்கா? கமிஷனர் பெண்டாட்டிங்கிற திமிர் அவளுக்கு!"

" சரி, இப்ப நம்ம மூணு பேரிலே யார் இப்ப அவங்க ரெண்டு பேரையும் அழைச்சிண்டு போகப்போறோம்?"

" அந்தக் கேள்வியே அனாவசியம்! நீதான் வாக்கு கொடுத்தே, நீதான் அழைச்சிண்டு போகணும்...."

" ஆமாம், அக்கா! முக்கியமான ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது, வந்தவுடனே உணர்ச்சிவசப்பட்டு, இந்த இல்லத்துக்கு ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் நன்கொடை தருவதாக வாக்கு கொடுத்துட்டோம், அதுக்கே, என் கணவன் என்ன சொல்வாரோ தெரியலே, "

" ஆமாம், அது ஒரு பிரச்னை இருக்கே! விமலா! நீயும் அக்காவுமா பேசி முடிவு பண்ணுங்க, என்ன முடிவானாலும் நான் ஒத்துக்கறேன், இப்ப நான் கிளம்பறேன், அப்பா! அம்மா! நான் கிளம்பறேன், லேட்டாயிடுத்து!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.