(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 16 - ரவை

வீட்டு வாசற்படியில் தலைவைத்து படுத்திருந்த சகாதேவனின் காதில் 'ஐயா!'என்ற குரல் விழுந்ததும், அவர் எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தார்!

ஒருவரையும் கானோம்!

மறுபடியும் 'ஐயா!' என்ற குரல்!

மூடியிருந்த கதவு வழியாக வந்தது, அந்தக் குரல்!

"சொல்லுங்க, பெரியவரே! ஏதாவது வேணுமா?"

"நீங்கதான் வேணும், ஐயா!"

சகாதேவன் வாய்விட்டு சிரித்தார். பிறகு, மூடிய கதவருகே போய் அமர்ந்து, " சொல்லுங்க, பெரியவரே!" என்றார்.

" உங்க பேரு?"

" சகாதேவன்!"

" என் பேரு காந்தி!"

" பெரியவருக்கு பொருத்தமா இன்னொரு பெரியவருடைய பேரு, பெரும் பேறு!"

" வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறது, சிறைவாசம் மாதிரியிருக்கு! வேளாவேளைக்கு, நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்துடறீங்க, வீட்டிலே வேலை ஏதுமில்லே, போரடிக்குது, அதான் உங்களோட பேசிக்கிட்டிருக்கலாம்னு கூப்பிட்டேன், உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லீங்களே?"

" பெரியவரே! நீங்க உள்ளே வேலை இல்லாம இருக்கீங்க, பேச ஆளில்லாம போரடிக்குதுங்கறீங்க!

நான் வெளியிலே, வேலையில்லாம, கூடப் பேச ஆளில்லாம இருக்கேன், ஆனா ஒரு வித்தியாசம்! நீங்க சொல்றீங்களே, 'போரடிக்குது'ன்னு, அது கிடையாது......"

" அப்படியா? அதெப்படி?"

"மனசை வெறுமையா வைத்துக்கொண்டு, கண்ணில் படுகிற பொருட்களை நுணுக்கமாகப் பார்ப்பேன், அதன் அழகை ரசிப்பேன், அப்படி ரசிக்கும்போது, எனக்குள்ளே ஒரு சக்தி இருப்பதை உணருகிறேன், அதனோடு ஐக்கியமாயிடுவேன், 'எல்லாமே நான்தான்!' என்று அறிவேன்."

" ஐயா! அங்கிருந்தே உங்க காலைமட்டும் நீட்டுங்க, தொட்டு கும்பிட்டுக்கிறேன்......."

" தப்பு! தப்பு! நீங்க பெரியவங்க!"

" பெரியவங்க, சிறியவங்க என்பது உலகத்திலே தப்பா உபயோகப்படுது, உங்களை மாதிரி உலகத்தையே தானாக, எல்லாரையும் ஏற்றத்தாழ்வில்லாம, பார்க்கிறவங்கதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.