(Reading time: 7 - 13 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

"ஐயா! நீங்க போட்ட முதலுக்கு கிடைச்ச லாபம்தானே, உங்க பணம்தான்யா"ன்னு சொன்னேன்.

அவர் என்ன சொன்னார் தெரியுங்களா?

"நான் பண்ணையாரா பணம் சேர்க்க முடிந்ததுக்கு காரணம் உங்க குடும்பம் மாதிரி நிறைய குடும்பங்களின் உழைப்புதானே! அதாவது, உங்க குடும்பத்துப் பணம்தானே"ன்னு சொல்லிட்டாரு!

எனக்கு கல்யாணம் செஞ்சுவைச்சாரு, இந்த ஊரிலே என் குடும்பம் சிறப்பா நடக்கறதை வந்து வந்து பார்த்து சந்தோஷப்படுவார்!

இருபது வருஷம் முன்பு, அவரு வயசாகி நோயாளி ஆயிட்டார். நான் போய் பார்த்து அழுதேன்.

அப்ப, அவர் சொன்னாரு, " என்மேல நீ வைச்சிருக்கிற மரியாதையும் அன்பும் இன்னும் பல பேருக்கு நல்லது செய்ய உன்னை தூண்டணுங்கறதுதான் என் ஆசை! நீ என்ன பண்ணு! நீ வாழற ஊரிலேயே, ஒரு முதியோர் இல்லம் நடத்து! வயசானவங்களுக்கு இலவசமா இடம், உணவு, உடை கொடு. ஆதரவில்லாத வயசானவங்களுக்கு வாழ்வு கொடு! அவங்க உன்னை மனசார வாழ்த்துவாங்க! அதுதான் உன்னை என்றைக்கும் காப்பாற்றும்"னு சொன்னாரு!

அவர் சொல்லை மதித்து உடனே இந்த ஊர் எல்லையிலே ஒரு முதியோர் இல்லம் ஆரம்பித்தேன், இன்னி வரையிலும் நல்லா நடக்குது, எல்லாம் பெரியவர் ஆசைப்படி நடந்ததனாலே!

அந்த இல்லத்தை துவக்கும்போது, பெரியவரிடம் " என்ன பெயர் வைக்கலாம்?"னு கேட்டேன்.

"காந்தி முதியோர் இல்லம்"னு பெயர் சொன்னாரு!

"ஐயா! என் பெயர் வேண்டாம், உங்க பெயர் வைக்கிறேன்"னு சொன்னேன். அதற்கு அவர் சொன்னாரு, " இந்த காந்தி நீ இல்லே, மகாத்மா காந்தி!"ன்னாரு!

அவரு பெரிய காந்தீயவாதி! கதர்தான் கட்டுவார். எளிமையா வாழ்ந்தார். சாதி, மத பேதம் பார்க்கமாட்டார்........"

" உங்க மகன்தான் இப்ப அந்த இல்லத்தை கவனிச்சிக்கறாரா?"

" இல்லே, எனக்கு வயசாயிட்டதனாலே, தொழிலை மகன் பார்த்துக்கறான், இல்லத்தை பார்த்துக்க ஒரு காப்பாளரை வேலைக்கு வச்சிருக்கிறோம், நல்லவரு, யோக்கியமானவரு, ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் அவர்தான் கவனிச்சிக்கிறாரு.

கிட்டத்தட்ட, நாற்பது வயசான தம்பதிங்க வாழறாங்க, குறையேதுமில்லாம........."

" பெரியவரே! உங்களைப்போல, ஒரு நல்ல மனிதருக்கும் அவருடைய குடும்பத்துக்கும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.