(Reading time: 5 - 10 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

ஒரு கோடி ரூபாய்னுசொல்லிட்டதாலே, இருபதுகோடின்னு சொல்றீங்க,...நான் பேசி முடிவு பண்ணியிருக்கிறது எவ்வளவு தெரியுமா? அசந்து போய்விடாதீங்க! முப்பது கோடிரூபாய்!" நிரஞ்சன் மயக்கம்போடாத குறை! அசந்துபோய்ட்டார். " அதாவது ஒவ்வொருஓனருக்கும் ஒண்ணரைகோடிரூபா சுளையா கிடைக்கும்!" " ரொம்ப சந்தோஷமாஇருக்குப்பா!" " ஆனா, இப்ப நான்சொல்றதை கவனமா கேட்டுமுடிவு சொல்லுங்க.....

இந்த முப்பது கோடிரூபாயிலே எனக்கு கமிஷன்ஒரு கோடி!.... இப்ப நான்சொல்லப்போவது, நம்மரெண்டு பேருக்குள்ளே ஒருதனி ஏற்பாடு! நெருங்கி வந்துகேளுங்க!" நிரஞ்சன் வாசற்கதவைதாளிட்டுவிட்டு வந்து, பிரபாவை நெருங்கி வந்தார். " இந்த டீல் பெரியவிஷயம்! ஆறு மாசத்துக்குள்எல்லா வேலைகளும் முடிந்துமனையும் கட்டிடமும் அந்தவியாபாரியிடம் ஒப்படைக்கஎல்லா வேலைகளையும் நாமரெண்டுபேர் செய்தாகணும்.என்னென்ன வேலைன்னுசொல்றேன்.... முதல்லே அக்ரிமெண்ட்போட்டாகணும். என்னன்னு?நீங்க இருபது ஓனர்களும்அந்த வியாபாரிக்கு கூட்டாகஇந்த விலைக்கு சம்மதம்னுஎழுதித் தரணும்....

கூடவே, பத்திரங்களைநகல் எடுத்து தரணும்.

விலைப் பணத்தைவெள்ளைப் பணமாகத்தான்தருவார். அதாவது, கணக்கில்காட்டுகிற பணம்!

பிளாட்டை ஆறு மாதகாலத்துக்குள் காலி பண்ணிதரணும்.

ஏன்னா, வாங்கறவருகட்டிடத்தை இடித்துவிட்டுபுதுசா, கடைக்கு தேவையாவேறவிதமா கட்டப்போறார்.

இதிலே, நம்ம ரெண்டுபேருக்கும் நிறைய வேலைஇருக்கிறதாலே, அதுக்குஈடா ஆளுக்கு ரெண்டு கோடிரூபாய் எடுத்துக்கணும்.

மற்றவங்களுக்கு இந்தவிஷயம் தெரியக்கூடாது.

அதனாலே, ஐந்துகோடி ரூபாயை கறுப்புப்பணமா வியாபாரியிடமிருந்துவாங்கிடறேன். அதாவது என்பங்குக்கு மூணும் உங்களுக்குரெண்டும் எடுத்துக்கத்தான்!

அக்ரிமெண்ட்லே விலை இருபத்தைந்து கோடிரூபாய்னு போடச் சொல்லி,அதை இருபது ஓனர்களும்பிரித்து எடுத்துக்குங்க!

அதாவது ஒவ்வொருபிளாட்டுக்கும் ஒண்ணேகால்கோடி வரும்.

அதுவே அவங்களுக்குஅதிகமாகத் தெரியும். ஒப்புக்கொள்வாங்க, நிச்சயமா! என்ன சொல்றீங்க?"

நிரஞ்சன் மகிழ்ந்துபிரபாவை அணைத்து கைகுலுக்கினார்.

"பிரபா! இருபது ஓனர்களிலே, பத்துபேர் தான் இங்கு வசிக்கிறாங்க, மற்றபத்து பேர் வாடகைக்கு விட்டுவிட்டு சில பேர், உள்ளூரிலேவேற வீட்டிலும், மற்றவங்கவெளியூரிலும் வசிக்கிறாங்க!நீ சொல்கிற மாதிரி, இருபதுபேரிடமிருந்தும் சரியானநேரத்துலே, பத்திரங்கள்வாங்கணும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.