(Reading time: 22 - 43 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 26 - சகி

நேற்று, இன்று, நாளை என்கிறோம்! நேரம், காலம், சமயம் என்கிறோம்! மனித வாழ்வில் இன்றியமையா சில திருப்பங்களைச் சந்திக்கும் சூழல் வரும் போதெல்லாம் விதியின் மேல் பழியிட்டு அமர்கிறோம். எதிர்ப்பார்ப்புகள் யாதோ அது நாம் எதிர்நோக்கியவண்ணம் இல்லையெனில், மனமுடைந்துத் தான் போகிறோம்! என்றோ நாம் பிறருக்கு செய்யும் சூழ்நிலையில் அது ஆனந்தமாக உள்ளது, அதுவே நமக்குத் திரும்புகையில் மனம் வெதும்பிடத்தான் செய்கிறது இல்லையா? அழகழகாய் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலர்கள் மதுரமாய் மணம் வீசிடவே செய்கின்றன. இன்றுக் களையப்படுவோமோ? நாளையோ? அது என்றுமே எண்ணியிருக்க வாய்ப்பில்லை...அக்காரணம் தொட்டே,அம்மலர்கள் இறைவனின் மார்பினை அலங்கரித்துவிடுகின்றன. இத்தனைக்கு அதற்கு ஆயுளோ ஓர் நாள் மட்டுமே! அதற்கு ஓர் நாளில் இறந்துவிடுவோம் என்ற மெய் புலப்பட்டுவிடும்! அதனாலே வாழும் நாளில் தனது வாழ்வில் ஒட்டுமொத்த இன்பத்தினையும் நுகர்ந்துவிடுகிறது! அது எவரையேனும் அலங்கரிக்கும் நிகழ்வு கூடுதல் வரம்! மனிதன் ஆறறிவு கொண்டவனாம்! ஒரு நொடியில் கூட முடிந்துப் போகும் வாழ்க்கையை வைத்துக் கொண்டு, நான் அவனைவிட செல்வந்தனாக வாழ வேண்டும்! இவனை விட பலம் பொருந்தியவனாக வேண்டும்! தன்னைவிட சிறந்த ஞானி இருக்கக் கூடாது என்கிறான். மனிதன் ஆறறிவு பெற்றவனாம்! என்னத்தான் இல்லை ஒருவரது வாழ்வினில்! திறமை இல்லை என்றால்...அதனை வளர்த்துக் கொள்ள காலமும் இல்லையா? செல்வம் இல்லை என்றால்..பொருள் ஈட்ட வாய்ப்புகளும் இல்லையா? பாதைகள் வெவ்வேறுத் தான் இலக்கோ ஒன்றல்லவா! நேற்று இன்று நாளை என்கிறோம்! உறங்கி எழுந்து ஒரு விடியல் ஊனுக்கு உண்டென்றால்..வாழவும் வழி உண்டுத்தானே வையத்தில்! ஆயுள் மேலான நம்பிக்கை இங்கு பலருக்கு தங்களின் மீது ஏனோ இருப்பதில்லை. விசித்ர மானிடர்கள்! இன்றோ இறந்துவிடுவோம் என்று வானத்து அசரீரி முழங்கினால், அனைவரையும் பரிகாசம் செய்வீர்களா? குரோதம் கொள்வீர்களா? வாழும் நொடி அதோடு மரணித்துவிடுகிறது...நாம் விரும்பினாலும், இல்லையென்றாலும், வாழும் வாழ்வினை சிறந்த முறையில் வாழ்ந்துத் தான் செல்வோமே!

ஏறத்தாழ இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக தொலைக்காட்சியோடு இணைத்துக் கொண்டு ஏதோ ஓர் விளையாட்டினை இமைக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான் அதர்வ். அவன் விளையாடுகிறான் என்பதனை விடவும் தனது ஒட்டுமொத்த உணர்வுகளையும் அதன் மேல் காட்டிக் கொண்டிருந்தான் அவன். என்னத்தான் செய்கிறான் என்பதனை அனைவருமே கண்டப் போதிலும், அவனிடத்தில் சென்று என்னத் தான் பிரச்சனை என்பதனை வினவிட எவரும் முன்வரவில்லை. அச்சப்தம் அனைவருக்குமே சற்று எரிச்சலூட்டவே செய்துக் கொண்டிருந்தது.

"கடவுளே..!" என்று உணவருந்த அமர்கையில் தலையில் கைவைத்துக் கொண்டு தனது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.