(Reading time: 22 - 43 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"டேய்!" பதறிப் போயினர் தந்தையும், தமையனும்!

"வராதீங்கன்னு சொன்னேன்ல!" உதிரத்தால் நிறைந்த கரத்தினைச் காட்டிய வண்ணமே அனைவரையும் தடுத்தான் அவன்.

"என்கிட்ட ஏன் பொய் சொன்ன?" மிருகமாய் உருமாறியவனிடத்தில் எப்பதிலும் உரைக்க துணிவில்லை அவன் அன்னைக்கு!

"என்கிட்ட நாடகமாடினது நீ! என் அப்பாவை இத்தனை வருடமா முடக்கி வைத்தது நீ! என்னை இன்னிக்கு யாருமில்லாத அநாதையா மாற்றினது நீ! இன்னிக்கு நான் குற்றவுணர்வுல செத்துட்டு இருக்கேன் அதற்கு காரணமும் நீ!" அனைத்திற்கும் அவன் குற்றம் சாட்ட ஆடிப்போனார் மதுமதி.

"இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கணுமே! இல்லை...நானே ஞாபகப்படுத்திறேன்!" என்றான் சாதாரணமாக!

"அ..அதர்வ் அமைதியா இருடா!" மன்றாடாத குறையாக வேண்டினார் சூர்ய நாராயணன்.

"நான் உன்னைப் பேச சொல்லலையே!" என்றான் பதிலாக!

"ரொம்ப வருடத்திற்கு முன்னாடி நடந்தது. இன்னிக்கு நீ நின்ற இடத்துல தான் அன்னிக்கு அவங்களும் நின்றாங்க சரியா?" பல காலங்களுக்கு முன் தர்மாவை அவமானப்படுத்திய அதே இடத்தினைத் தன் கண்களால் கண்டார் மதுமதி. ஆடிப்போனவனாய் தந்தையினை நோக்கினான் அசோக்.

"நான் இல்லைன்னா உன்னால இருக்க முடியாதுல! இரு வரேன்! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன்மா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!" புன்னகையோடு தன் அறைக்குள் சென்றான் அதர்வ். ஒரு நொடியில் அனைத்தும் இயல்பாகியதா என்று புரியாமல் அனைவரும் விழிக்க, சூர்ய நாராயணனுக்கு மட்டும் ஏதோ பொறித் தட்டியது. பதறியவண்ணம் தன் மகனைத் தடுக்க மாடியில் ஓடினார் அவர். அதற்குள்ளாகவே ஆக்ரோஷத்துடன் வெளிவந்தவனைப் பிடித்துத் தடுத்தார் அவர்.

"வேணாம்டா!" என்றுத் தடுத்த தந்தையை தள்ளிவிட்டவனாய், மீண்டும் அதே இடத்திற்கு வந்து நின்றவன்,

"பத்து மாசம்..என்னை சுமந்ததுக்கும், இத்தனை வருடம் என்னைத் தப்பான வழியில வளர்த்ததுக்கும் இதை எடுத்துக்கோ!" என்றுத் தான் கொணர்ந்த காகித பணத்தினை மாடியில் இருந்த வண்ணமே அவர் மேல் விட்டெறிந்தான் அதர்வ். அதனைக் கண்டவரின் நினைவுகளில் கடந்தக்கால ஞாபகங்கள் ஓடின,

"ஒரு ராத்திரி நீ இங்கே இருந்ததுக்கு, இதை எடுத்துட்டு கிளம்பு!" அன்றுத் தர்மாவின் மேல் பணத்தினை விட்டெறிந்த அதே நிகழ்வு மீண்டும் உயிரோட்டம் பெற்றது. அச்செயலை செய்துவிட்டு எச்சலனமும் இன்றி திரும்பி நடந்தான் அதர்வ். அனைத்தையும் கண்டு உறைந்து நின்றவனாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.