(Reading time: 22 - 43 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டவனின் மனதில் காயங்கள் மட்டுமே நிரம்பியிருந்தது. ஒரு காலத்தில் அடுத்தவரை காயப்படுத்தி சிரித்தவன், இன்று அனைவருக்கு முன்னாலும் கூனி குறுகி நிற்கிறான். சாதாரண மனிதனாய் வாழ விதி அவனுக்கு ஓர் வாய்ப்பினை ஏன் நல்கவில்லை என்றே தோன்றியது அவனுக்கு! ஆறுதல் தேட கூட அவனுக்கு என்று எவரும் இல்லையோ என்றுத் தோன்றியது அவனுக்கு! என்னத் தான் தந்தையானவர் அவனை அன்போடு கவனித்துக் கொண்டாலும், கடந்தக் காலத்தில் அவரை படாதப்பாடு படுத்தி, அவமானப்படுத்திய பின்னர் அவரிடத்தில் சகஜமாக உரையாடி மகிழவும் மனம் துருத்தியது. இது அவர் அறைத்தான்! எங்கே தனிமையில் தவறான முடிவினை ஏற்றுவிடுவானோ என்ற எண்ணத்தில் அவனைத் தனிமையில் விடுவதே இல்லை சூர்ய நாராயணன். எதைச் சாதிக்க இந்தப் பூமியில் பிறந்தேனோ என்றுத் தன்னைத் தானே நொந்துக் கொண்டான் அதர்வ். மனம் முழுதும் காயங்கள் மட்டுமே இருந்தது!

"எல்லாத்தையும் செய்தது உன் அம்மாத்தான்! என்னையும், என் தர்மாவையும் பிரித்து, அவளைக் களங்கப்படுத்தி, அவ மேலே பணத்தை தூக்கி எறிந்து, என்னை நடக்க விடாமல் செய்து, எல்லாத்தையும் அவத்தான் பண்ணா!" மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது தந்தையின் வார்த்தைகள்! சிந்தனையோட்டத்தில் மூழ்கியிருந்தவனின் அறைக்கதவுத் திறவப்பட, திரும்பியும் எவரையும் பார்க்காமல்,

"வெளியே போறீயா?" என்றான் தந்தையின் நினைப்பில்! மீண்டும் அறைக்கதவு மூடப்படும் ஓசைக் கேட்டப்பின் எவரோ தன்னை நோக்கி நடந்து வரும் உணர்வு மேலோங்க, திரும்பி நோக்கினான் அதர்வ்! வந்தது தந்தையல்ல, தமையனானவன்! இவன் ஏன் வந்தான் என்பதாய் அவனை நோக்கினான் அதர்வ்!

"என்ன வேணும்?" வேண்டா வெறுப்பாகவே தொடங்கியது அந்த உரை!

"உனக்கு என்னைப் பிடிக்கலைன்னுத் தெரியும்! உன் இடத்தை நான் என்னிக்கும் எடுத்துக்க மாட்டேன். அதை முதலில் புரிந்துக்கொள்! அப்பா மேலே உனக்குத் தான் உரிமை அதிகம், அதை யாராலும் மாற்ற முடியாது! உனக்கு என் மேலே கோபம் கூட இருக்கலாம். சிவன்யாவை நீ தப்பா பேசியதால தான் நான் அன்னிக்கு அப்படி நடந்துக்கிட்டேன். நான் ஒண்ணும் இங்கேயே இருந்துவிட போறதில்லை! நான் இங்கே வந்தது என் பாட்டியை பார்க்க அவ்வளவுத்தான்! சீக்கிரமே நாங்க இங்கிருந்து கிளம்பிவிடுவோம். அதைப் புரிந்துக்கொள்! தேவையில்லாம, மனதைப் போட்டு குழப்பிக்காதே!" என்றுத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தான் அசோக். தான் வந்த விவரத்தை கூறிவிட்டு வெளியேற முயன்றவனைத் தடுத்தது,

"உனக்கு அவர் மேலே உரிமை இருக்கு!" என்ற இளவலின் குரல். குழப்பமாக அவன் முகம் ஏறிட்டவனின் முகம் கண்ணீரோடு நின்றிருந்தான் அதர்வ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.