உண்மையினைப் போட்டு உடைத்தார் மதுமதி. அதனைக் கேட்டவர் இதயத்துடிப்பே நின்றுப்போனது.
"என்னடி சொல்ற?" என்றார் நம்ப இயலாதவராய்,
"ஒரு பிசினஸ் சக்சஸ் மீட்ல நான் கலந்துக்கிட்டதுத் தான் பெரியத்தப்பு! மிருகங்க மாதிரி..." பேச இயலாமல் திணறினார் அவர்.
"என்னால நீ இல்லாமல் வாழ முடியலை! அதனால தான் எங்கே எல்லா உண்மையும் தெரிந்தால் நீ என்னைவிட்டு போயிடுவியோன்னு உன்னை என் கட்டுப்பாட்டிலே வைத்திருக்க அந்த மருந்தை உனக்குத் கொடுத்தேன். அசோக் உன்னை என்கிட்ட பறித்துவிடுவானோன்னு பயந்துத் தான் உன்னை கொன்றுவிட்டு, நானுமே இறந்துவிடலாம்னு அன்னிக்கு உன்னைக் கொல்ல முயற்சி பண்ணேன். அப்போ அதர்வ் கூட என் ஞாபகத்துல இல்லை!உன்னை அடைய நான் தேர்ந்தெடுத்த வழி தப்பானதுத் தான். ஆனா, நான் உன்னைக் காதலித்தது உண்மை! இத்தனை நாளா நான் எங்கே இருந்தேன்னு கேட்டல்ல! நீ இல்லாததை என்னால ஏற்றுக்கக் கூட முடியலை..ஒவ்வொரு நொடியுமே பைத்தியக்காரி மாதிரி பண்ணிட்டு இருந்தேன். எங்கே நான் பைத்தியக்காரத்தனமா செய்ய போறேன்னு ட்ரீட்மண்ட் எடுத்துட்டு இருந்தேன் லண்டன்ல, அதனால உனக்கு நான் எங்கே போனேன்னு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனையும் உனக்காகத் தான் பண்ணேன்! ஆனா, நான் பண்ணதுத் தப்பு...அது இன்னிக்கு எனக்குப் புரிந்துவிட்டது." என்று எழுந்தார் அவர்.
"அதர்வ்வை பத்திரமா பார்த்துக்கொள்! நான் போறேன்." என்று நகர்ந்தவரின் கரம் பற்றி தடுத்தார் சூர்ய நாராயணன். அவளது அனைத்து இரகசியங்களும் உடைப்பட்டுவிட, செய்வதறியாதுத் திகைத்தவராய், மதுமதியை இறுக அணைத்துக் கொண்டார் அவர். மனதிலான அத்தனை ஆண்டுக்கால ஏக்கத்திற்கு வடிக்காலாய் அமைந்தது அந்த நெருக்கம்!
"ப்ளீஸ்...என் கூட வந்துடு..ப்ளீஸ்!" மன்றாடினார் அவர். தன் கணவனை ஆரத்தழுவியவராய்,
"எத்தனை வருடம் இதற்காக ஏங்கி இருக்கேன் தெரியுமா? ஒருவழியா..நான் ஆசைப்பட்டது இத்தனை வருடம் கழித்து எனக்குக் கிடைத்திருக்கு!" என்று அவர் விழிகள் துளிக் கண்ணீரைச் சிந்து அவரதுப் பாவங்கள் அனைத்தினையும் நீக்கின.
"எனக்கு இதுவே போதும்! தயவுசெய்து என்னைப் பின் தொடராதே!" என்று வலுக்கட்டாயமாய் அவரைப் பிரிந்தவர், கரம் குவித்து, ஏனோ ஒருமுறை அவர் பாதம் தொட்டு வணங்கினார்.
சில காலங்கள் கழித்து....
"என்னத்தான்பா உனக்குப் பிரச்சனை?ஏன் என் உயிரை இப்படி வாங்கிட்டு இருக்க?" பொறுமையிழந்தவனாய் கத்த, ஆரம்பித்துவிட்டார்களா என்பதாய் தேநீர் பருகிக் கொண்டிருந்தான் அசோக்.
"ஓ...துரை வாழ்க்கை முழுசா அப்படியே உட்கார்ந்து சாப்பிடலாம்னு பார்க்கிறீங்களா? அவனால