(Reading time: 10 - 20 minutes)
Nenchil thunivirunthaal

"என்னுடைய வேதனையை நான் யாரிடமும் பகிர்ந்துக்கவே விரும்பலை! அதுமாதிரி எதுவும் நடக்காது. நான் நாளைக்கு கிளம்புறேன்! என்னைக் கான்டாக்ட் பண்ற ஒரே ஆள் நீ மட்டுந்தான்! அம்மா எப்படி இருக்காங்கன்னு அடிக்கடி எனக்குத் தெரியப்படுத்து..." என்று தனது வேண்டுதலை முன் வைத்தான் உடையான். அதற்கு அவன் ஏதோ கூற முயல,

"என்னைத் தனியா விடு!" என்று அனைத்து உரையாடல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தான் அவன். இனி பேசி எப்பயனும் இல்லை என்பவனாய் வேறு உபாயமின்றி அவன் வேண்டிய தனிமையை நல்கியவனாய் வெளியேறினான் ரவி. அனைவரும் விலகிவிட, ஏற்பட்ட தனிமையில் தனது பிரியமான பியானோவின் முன் அமர்ந்தவன், இலக்கே இன்றி வாசிக்கலானான். எவ்வளவு ஆழமாய் அவன் மனம் இசையில் மூழ்கியதோ அவ்வளவு ஆழமான உணர்வுகளுடன் கூடிய இசையானதுப் பிறப்பெடுத்தது. தனது வாழ்க்கை இப்படியா திசைத்திருப்பப்பட வேண்டும் என்பவனாய் விரக்தியோடு இசைத்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தன்னாலே கலங்கி பூமியினைப் புனிதமாக்கின.

தோ மிகப்பெரிய பொக்கிஷத்தினைத் தொலைத்துவிட்ட பேதையாய் வாழ்வே வெறுத்துப் போய் அமர்ந்திருந்தார் தர்மா. கம்பீரமாய் உரையாற்றிய குரலும், பார்வையும் காணாமலே போயிருந்தன. அடுத்து என்னச் செய்வது என்று விளங்காமல் தவித்திருந்தனர் அனைவரும்! அவனால் எப்படி, இத்தகு முடிவினை மேற்கொள்ள இயன்றது? தாய் தான் உலகம் என்றெல்லாம் கதையளந்தவன் இப்போது எங்கே சென்றுவிட்டான் என்றெல்லாம் மனதில் கோபத்தனல் தகித்துக் கொண்டிருந்தது அவனுக்கு! அவன் எங்கோ சென்றுவிட்டான் என்று அறிந்ததிலிருந்து தர்மா நீராகாரத்தினையும் ஏலவில்லை. மனம் நொடிந்துப் போய் அமர்ந்திருந்தார். எவரிடமும் பேசவும் இல்லை. என்னப் பேசினாலும் பதிலும் உரைக்கவில்லை. நிச்சயமாய் இளையவன் கையில் கிட்டினால் சமாதிக் கட்டிவிட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்தான் மூத்தவன். இல்லமே சூன்யமாய் உருமாறியிருக்க, திடீரென வெளியே ஏதோ வாகனம் வரும் ஓசைக் கேட்டு புத்தொளியோடு எழுந்தார் தாயார்.

"உதய்!" எல்லையற்ற ஆனந்தம் அவரிடத்தில் தாண்டமாட, எதனைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வாயிலை நோக்கி ஓடினார் அவர். இல்லத்தின் முன் வந்து நின்ற வாகனத்திலிருந்து அவன் இறங்குவான் என்ற எதிர்ப்பார்ப்பு அவருடையது! அதனை உடைக்கும விதமாக இறங்கினார் இராகவன். காரணமற்ற அத்திக்விஜயம் கண்டு ஆடிப்போனார் தர்மா. என்ன நிகழ்கிறது? இவர் எதற்காக வர வேண்டும்? என்ற ஆயிரமாயிர குழப்பங்கள் அவரிடத்தில் இருந்தன. வந்திருப்பது தனது புதல்வன் இல்லை என்பதனை உணர்ந்தவராய் விரக்தியோடு திரும்பி நடந்தார் அவர். தாயின் இறுகிய முகத்தினைக் கண்டு கேள்வியாய் நோக்கிய மகனிடத்தில்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.