(Reading time: 10 - 20 minutes)
Nenchil thunivirunthaal

தரவில்லை.

"விடுங்க..!" அவர் எவ்வளவோ தடுத்த சமயத்தில் வம்போடு தன் மனைவியை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றார் இராகவன்.

"என்னங்க! என்னப் பார்த்துட்டு நிற்கிறீங்க? அவரைத் தடுத்து நிறுத்துங்க.." என்றுப் பதறிய மாயாவிற்கு அவனால் கண்ணீர்த்துளிளை மட்டுமே பதிலாக நல்க முடிந்தது.

லக்கே இன்றி ஏதோ ஓர் இலக்கினை நோக்கிப் பயணிக்கத் தயாராகிக் கொண்டிருந்தான் உடையான். அவ்வில்லம் தாயாரின் விருப்பத்திற்கேற்ப கட்டப்பட்டது. ஒவ்வொரு செங்கலும் இங்குத்தான் இடம் பெற வேண்டும் என்று அனைத்தையும் அவரே தீர்மானித்தார். அதனாலே, அவ்வில்லத்தினை விட்டு நீங்கிவிட மனம் இலயிக்கவில்லை அவனுக்கு! எங்கும் அன்னையுடன் வாழ்ந்த நினைவுகளே கண்முன் விரிந்துத் துன்பத்தினை அதிகரித்தன. எழுந்த கண்ணீர்த் திவலைகள் அடங்குவதாகவே இல்லை சிறிதளவும்! சிறுப்பிள்ளையை போல தேம்பிக் கொண்டிருந்தான் உடையான். சரிவர உணவு உட்கொள்ளாதவனுக்கு பசியும் சேர்ந்து எடுத்தது. மனதிற்குத் தானே கவலை, பாவம், தேகம் என்னச் செய்யும்? அன்னையும் எப்படியும் உணவருந்தியிருக்க மாட்டார் என்ற காரணத்தாலே அவன் அதனை மதிப்பதாகவும் இல்லை. அவர்களுக்கும், இவனுக்கும் இடையிலே இருக்கும் ஒரே இணைப்பு அந்தக் கைப்பேசி மட்டுமே! அதிலிருந்த சிம்மை தூக்கி எரிய முனைந்தவனுக்கு எக்காரணத்தாலோ ஓர் ஒலித்தகவல் வந்துச்சேர, அவனையே அறியாமல் அதனை உயிர்ப்பித்தான். பேசியது நிச்சயம் மாயாத்தான், அவளதுக் குரலில் அவ்வளவுப் பதற்றம்! அதைக் கேட்டுத் தானும் பதறிப் போனவனாய் என்னவென்று தீர்க்கமாக செவிமடுத்தான் உடையான்.

"உதய்! ப்ளீஸ்...நீ இதைக் கேட்டா தயவுச்செய்து ஊருக்குத் திரும்பி வா! இங்கே எல்லாமே கை மீறிப் போகுது! மாமா சம்பந்தமே இல்லாமல் வந்து அத்தையை வலுக்கட்டாயமா அவர் கூட கூட்டிட்டுப் போயிட்டாரு! நானும், அவரும் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும் எங்களை அவர் மதிக்கவே இல்லை. அத்தை ரொம்ப மனசு உடைந்து இருந்தாங்க! எங்களுக்குப் பயமா இருக்கு! ப்ளீஸ்...உதய்..நான் உன்கிட்ட கெஞ்சிக் கேட்கிறேன்..தயவுசெய்துத் திரும்பி வா!" கதறி அழுதவண்ணம் அத்தகவல் முடிந்துப் போக, சற்றும் தயங்கவில்லை அவன். வந்த நோக்கமெல்லாம் மறந்தே போனவனாய் உடனடியாக இல்லத்திலிருந்து கிளம்பினான்.

"ரவி வந்தா நான் அம்மாவைப் பார்க்கப் போறேன்னு சொல்லுங்க!" செல்லும் பாதையிலே பணியாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு வேகவேகமாக சென்றுக் காரில் ஏறினான் உடையான். அவன் எதன் காரணத்தினால் அனைவரையும் துறந்துச் செல்ல முயன்றானோ, அனைத்தையும் மறந்தவனாய் திரும்ப செல்கிறான். அவனிடத்தில் ஒற்றை காரணம் மட்டுமே இருந்தது, அவனது அன்னை!!

தொடரும்!

Next episode will be published as soon as the writer shares her next episode.

Go to Nenjil thunivirunthaal story main page

{kunena_discuss:1163}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.