(Reading time: 6 - 12 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

“ 'விற்கலாம்'னு கோரஸாகுரல் வந்து ஓய்ந்தபோது,ஒரே ஒருவர் மட்டும் கைஉயர்த்தினார். ஆச்சரியத்துடன் மற்றஓனர்கள் பார்த்தபோது,முதல் தளம் ரெண்டாம் எண்பிளாட் ஓனர் பரமசிவம்தான்கை உயர்த்தியவர்.

ஆட்சேபணை இல்லே,ஒரு சின்ன விண்ணப்பம்....

சொல்லுங்க!

என் பிளாட் டென ன்ட்காலி பண்ண கொஞ்சம் டயம்கேட்பாரு, அதனாலே ஆறுமாசம் அவகாசம் வேணும்.

இவ்வளவுதானா! பெரியகுண்டை தூக்கிப் போடப்போறீங்களோன்னு பயந்தேபோய்ட்டோம்...

பரமசிவம்! நிச்சயமாஆறு மாசம் கிடைக்கும், ஆனா அந்த ஆறு மாசம்இப்பவே துவங்கிடும். அதனாலே, குடித்தனம்இருக்கிறவருக்கு இப்பவேநோட்டீஸ் கொடுத்திடுங்க!

அதெப்படி முடியும்?இன்னமும் விவரமா எதுவும்பேசவே இல்லையே....

பரமசிவம்! மூணுமாதநோட்டீஸ் போதும், நீங்கவிவரங்கள் தெரிந்தபிறகேமுடிவு பண்ணுங்க! சரி, இப்பஒவ்வொரு பாயிண்டாபார்ப்போம்: நம்ம கட்டிடம் நாலுகிரவுண்டு மனையிலேயிருக்குநாலு தளம், மொத்தம் இருபது பிளாட், ஒரே அளவு,அதனாலே எல்லாருக்கும்ஈக்குவலா பணம் பிரிச்சிக்கொடுக்கப்படும். ஏன்னா,பேரம் பேசறபோது, தனித்தனி பிளாட்டா பேசலே, ஏன்னா வாங்கறவருக்குமொத்தமா இடம் வேணும்.

பத்துபேர் கொடுத்துமீதிப்பேர் தரலேன்னா, அவருவாங்கிப் பயனில்லே, இதைதெளிவா புரிஞ்சிக்குங்க! திரும்பவும் சொல்றேன்,நாம இருபது பேரும் எஸ்சொல்லி கையெழுத்துபோட்டால்தான் விற்கமுடியும்ஓ.கே.யா?”

ஓ.கே.

ஒவ்வொருவரும், அவங்க அவங்க வீட்டு டைடில் பத்திரம், வில்லங்கபத்திரம் நகலெடுத்து தரணும். அடமானம் வைச்சுகடன் வாங்கியிருந்தால், அந்த கடனை அடைக்கிறவழியை பாருங்க.....

அது பெரிய பிராப்ளம்இல்லே, ஏன்னா முன்பணமாஐம்பது லட்சம் கிடைக்குமே

அவ்வளவு பெரியதொகை முன்பணமா தரதயங்குவாரு, ஏன்னா நாமயாரும் எதிர்பாராத சிக்கல்வந்தால், செடில்மெண்ட்ஆக டிலே ஆகும் இல்லையாஅதனாலே பத்து லட்சம்தான்கிடைக்கும். நமக்கும் அதுவேநல்லது......

தலைவா! பசிக்குது,லஞ்ச் பிரேக் விடுங்க! அதுமுடிஞ்சதும், தொடருவோம்.

ஓ.கே.

தொடரும்

Next episode will be published on 29th September. This series is updated weekly on Tuesday mornings.

Go to Nalla Mudivu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.